📖 Samacheer Kalvi · 11th TN - English Medium · Tamil · Page 161definition

பல்கலை நிறுவு

Chapter 2: Front Matter · Tamil

பல்கலை நிறுவு XI Std Tamil கதிரும் நிலாவும் அண்ணா பல்கலைக் கழகத்தில் கட்டட அழகியல் கலைஞர்களுக்கான பட்டப்படிப்பின் (B.Arch.,) இறுதியாண்டு மாணவர்கள். கல்வெட்டுக்கலைப் பயிற்சியுள்ளவர்கள். தE ன்மையான கோவில்களுக்குச் சென்று கலையழகையும் நுட்பங்களையும் விருப்பத்துடன் ஒளிப்படம், ஆவணப்படங்களை எடுத்துத் தங்கள் வலைத்தளத்தில் கட்டுரைகளோ டு பதிவேற்றுவார்கள். கல்லூரியில் மூன்று நாள்கள் விடுமுறை கிடைத்தபோது அவ்விருவரும் தங்களின் பல நாள் கனவான தஞ்சாவூர்க் கோவிலுக்குச் செல்வதென்று முடிவெடுத்தனர்.

விடியலில் குளிர்காற்றின் மென்மையை அனுபவித்தபடி தஞ்சையில் இறங்கிய இருவரும் உறவினர் வீட்டில் ஓய்வு எடுத்தனர். பின்னர், நிழற்படக் கருவி, வரைபடத் தாள்கள் உள்ளிட்ட பொருள்களைக் கதிர் எடுத்துக்கொள்ள, நிலா கோவிலை நோக்கித் தன் வாகனத்தை ஓட்டினாள். கோவிலுக்குள் நுழைந்ததும், ஒளிப்படம் எடுப்பதற்கான அனுமதிச்சீட்டை கலையும் அறிவியலும் மனித குல வளர்ச்சியுடன் பின்னிப் பிணைந்தவை. மனிதனின் படைப்புத் திறனால் உருவானது கலையாகும்; அது நம் மனத்தில் அழகுணர்வை ஏற்படுத்தி மகிழ்வைத் தருகிறது.

நுண்கலை, பயன்கலை, பருண்மைக்கலை, கவின்கலை, நிகழ்த்துகலை எனக் கலைகள் பலவகைப்படும்.. கலை ஒரு சமூகத்தின் நாகரிகத்தையும் பண்பாட்டு மேன்மையையும் எதிரொலிக்கின்றது. தமிழகத்தில் பழங்காலத்திலேயே சிற்பம், கட்டடம், ஆடல், பாடல் முதலிய கலைகள் சிறப்புற்றிருந்தன. ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் கம்பீரமாகக் காட்சியளிக்கும் தஞ்சைப் பெரிய கோவிலின் கட்டடக் கலைநுட்பம் நம்மை வியப்படையச் செய்கிறது.

வாங்கிக்கொண்டு உள்ளே சென்றனர். சுற்றிப் பார்த்து ஆங்காங்கே நின்று ஒளிப்படங்கள் எடுத்தபடி, அதன் நுணுக்கங்களைக் கவனித்து வியந்த இருவரும் சற்றே களைத்தவர்களாய்த் திருச்சுற்று மாளிகையில் அமர்ந்தனர். பெரியகோவிலின் கோபுரங்களில் உயரமானது, கேரளாந்தகன் கோபுரம். இராசராசன் 988ஆம் ஆண்டு சேரநாட்டை வெற்றிகொண்டதைப் போற்றும் வகையில் இக்கோபுரத்திற்குக் “கேரளாந்தகன் வாயில் கோபுரம்’’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.

நிலா: கதிர், கவனித்தாயா? இந்தக் கோவிலில் இரண்டு கோபுரங்கள் இருக்கின்றன. கதிர்: ஆமாம். முதலில் உள்ளது கேரளாந்தகன் திருவாயில்; அதை அடுத்து உள்ளது இராசராசன் திருவாயில்.

இவை சோழர்களின் தனி அடையாளம். ஆமாம் நிலா, இங்குக் கோபுரத்தின் நிழல் விழாது என்று கேள்விப்பட்டிருக்கிறேன், உண்மையா? நிலா : விமானத்தின் நிழல் விழாது என்பது கட்டுக்கதை. தினமும் இருவேளையும் விமானத்தின் நிழல் முழுவதுமாகவே விழும்.

Related topics

Have a question about this topic?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →