நிர்ணயிக்கிறது என்கிறார் மலையாள க் கவி ஆற்றூர் ரவிவர்மா . பேச்சுமொழியில் ஒரு கவிதை செய்யப்படுகிறபோ து அஃது உடம்பின் மேல்தோல்போல் இயங்குகிறது. ஆனால் , எழுத்துமொழியில் அதே சொற்கள் கவிதையின் உணர்வை , உணர்ச்சியற்ற ஆடைபோல் போர்த்தி மூடிவிடுகின்றன. எனவே , கவிதை மரபான தனது செய்யுள் சந்தத்திலிருந்து விடுதலை அடைந்துவிட்டது.
அடுத்ததாக, அது கவிதைக்கென இருக்கிற தனித்துவமான மொழிநடையிலிருந்தும் விடுதலை அடைய வேண்டும். பெருங்கவிஞர்களின் வாய்மொழி பேச்சுமொழியைக் கவிதையில் பயன்படுத்துபவர்களில் மூன்று வகையினர் உண்டு. முதல் வகையினர், வால்ட் விட்மனைப் போன்றவர்கள். இவர்களுடைய கவிதைகளில் எந்தவொரு சொல்லும் மற்றொரு சொல்லை விட முக்கியமானதா கிவிடுவதில்லை.
எழுத்துகள் எப்படிச் சொற்களில் கரைந்து போகின்றனவோ அதுபோன் று சொற்கள் கவிதைகளில் கரைந்துபோ வதில்லை. இவற்றில் சொற்கள் தங்களுக்குத் தாங்களே பேசிக் கொள்வ தில்லை. இக்கவிதைகள் இறுக்கிச் சுற்றப்பட்ட கம்பிச்சுருளைப் போன் று அல்லாமல் பேச்சுமொழிக்கே உரிய தளர் வோடு கட்டப்பட்டவை. இதில் பல நேரங்களில் கவிதை என்பது நடன மாடிக் கொண்டிருப்பவன், அவ்வப்போ து நடப்பதற்குத் தாவிவிடுவதுபோல வெறுமனே ஒரு பேச்சு என்ற நிலைக்கு நழுவிவிடும்.
கவிஞர் மல்லார்மே போன்றவர்கள் இரண்டாம் வகையினர். இவர்களுடைய பேச்சு எதிராளியை விளித்துப் பேசுவது போன்றது அன்று. மின்சார ரயிலின் நெருக்கத்தில் படியில் தொங்கிக் கொண்டு போகிறபோது வெளியில் பரந்து கிடக்கும் தனிமையைச் சாட்சியாக வைத்துத் தங்களுக்குத் தாங்களே உதடு பிரித்துப் பேசிக் கொள்ளும் வகை. இவர்களுடைய கவிதைகளில் பேச்சு என்பது மூடிய நிலையில் செயல்படுகின்றது.
தனிப்பட்ட ஒவ்வொரு சொல்லும் பிறிதொன்றைப் பேசுவதோடு மட்டுமல்லாமல் தன்னையே பேசிக் கொள்கிறது. குறியீடுகளின் கூட்டம் ஒரு முனையிலும் மொழி மறுமுனையிலும் இருக்கையில் கவிதையின் பேச்சு, இடையில் இருக்கும் வெளியில் புழங்குகின்றது. வால்ட் விட்மன் வால்ட் விட்மன் அமெரிக்காவைச் சேர்ந்தவர். கவிஞர்; இதழாளர்; கட்டுரையாளர்; புதுக்கவிதை இயக்கத்தைத் தோற்றுவித்தவர்.
இவருடைய ‘புல்லின் இதழ்கள்’ (Leaves of grass) என்ற நூல் உலகப்புகழ் பெற்றது. கனவொன்று நான் கண்டேன் உலகெலாம் திரண்டுவந்து ஒருசேரத் தாக்கினாலும் தோற்காத பெருநகரம் ஒன்று கண்டேன் நண்பர்கள் நகரம் என்றொரு புதுநகரம் வந்தது என் கனவில். அன்பைவிடப் பெரிதென்ற ஒன்றும் அந்நகரில் இல்லை, அன்பின் வழித்தடத்தில் மற்றெல்லாம் சென்றன அதன் பின்னே. எந்நேரமும், மாந்தர் செய்வது எதுவென்றாலும், அன்பேதான் தெரிந்தது அங்கே அவற்றில் எல்லாம், மக்கள் தோற்றத்திலும் அன்பே, அன்பேதான் அவர் மIொழியும்.
XI Std Tamil குறியீட்டுக் கவிதை என்பது பொருளைப் பதிவு செய்வதன்று; நினைவுகூரத்தக்க தருணங்கள ப் பதிவு செய்வதாகும். மூன்றாவது வகையினர் ஸ்பானிஷ் மொழிக் கவிஞராகிய பாப்லோ நெரூடா போன்றவர்கள். ஒரு கவிதை, ஒரு பொருளைப் பற்றியது என்று தோன்றினா லும் அஃது அப்பொ ருளைப் பற்றியது அன்று. அது வாழ்க்கை யின் வடிவமற்ற தன்மையைப் பற்றிப் பேசுகிறது.
ஒரு வடிவம் கொள்ளுதல் என்பதை நோக்கி வாழ்க்கை தொட ர்ந்து முயல்கிறபோதும் அது இந்த முயற்சியில் ஒருபோ தும் வெற்றி கொள்வ தில்லை. இதுபோன்ற கவிதை, எந்தவித முன்கூட்டிய ஸ்டெஃபான் மல்லார்மே ஸ்டெஃபான் மல்லார்மே பிரான்சு நாட்டைச் சேர்ந்தவர். ஆங்கில ஆசிரியராகப் பணியாற்றியவர். இவரைப் புரிந்துகொள்வதன் மூலமே குறியீட்டியத்தையும் (Symbolism) புரிந்துகொள்ள முடியும்.
புத்தகங்களிலெல்லாம் படித்துவிட்டேன் நான் தப்பிப் போகத்தான் வேண்டும் அங்கே ஆனால் உடலோ சோகத்தில்! வானுக்கும் முன்பின் தெரியாத கடல் நுரைக்குமிடையே மயக்கத்தில் பறவைகள் பறப்பதை உணர்கிறேன்! என் கண்களில்