📖 Samacheer Kalvi · 11th TN - English Medium · Tamil · Page 16question

பேச்சுமIொழியும் கவிதைமIொழியும் · Part 4

Chapter 2: Front Matter · Tamil

தெரிய வரும். -தமிழின் கவிதையியல் நூலில் கா. சிவத்தம்பி தெரிந்து தெளிவோம் . பாரதியின் வசனகவிதைகளுள் உங்களுக்குப் பிடித்த கவிதையை வகுப்பறையில் படித்துக் காட்டுக.

. கவிதை குறித்துத் தமிழ்க்கவிஞர்களின் கருத்துகளைத் திரட்டி ஒப்படைவு எழுதுக. கற்பவை கற்றபின்... XI Std Tamil பாயிரம் இல்லது பனுவல் அன்றே .

முகவுரை பதிகம் அணிந்துரை நூன்முகம் புறவுரை தந்துரை புனைந்துரை பாயிரம். நூ. எண்: . பாயிரம் பொது, சிறப்பு எனஇரு பாற்றே.

நூ. எண்: . நூலே நுவல்வோன் நுவலும் திறனே கொள்வோன் கோடல் கூற்றாம் ஐந்தும் எல்லா நூற்கும் இவைபொதுப் பாயிரம். நூ.

எண்: . ஆக்கியோன் பெயரே வழியே எல்லை நூற்பெயர் யாப்பே நுதலிய பொருளே கேட்போர் பயனோடு ஆய்எண் பொருளும் வாய்ப்பக் காட்டல் பாயிரத்து இயல்பே. * நூ. எண்: .

காலம் களனே காரணம் என்றுஇம் மூவகை ஏற்றி மொழிநரும் உளரே. * நூ. எண்: . ஆயிரம் முகத்தான் அகன்றது ஆயினும் பாயிரம் இல்லது பனுவல் அன்றே.

நூ. எண்: . மாடக்குச் சித்திரமும் மாநகர்க்குக் கோபுரமும் ஆடமைத்தோள் நல்லார்க்கு அணியும்போல் - நாடிமுன் ஐதுரையா நின்ற அணிந்துரையை எந்நூற்கும் பெய்துரையா வைத்தார் பெரிது. நூ.

எண்: - பவணந்தி முனிவர் நூலைப் புரிந்துகொள்ளவும் அதன் சிறப்பை உணர்ந்து விருப்பத்துடன் கற்கவும் பாயிரம் உதவுகிறது. தமிழின் முதல் இலக்கண நூலான தொல்காப்பியத்தில் இத்தகைய அமைப்பினைக் காணலாம். தொல்காப்பியத்தையும் அதன் உரைகளையும் பின்பற்றி எழுதப்பட்ட நூலான நன்னூலில் பொதுப்பாயிரம், சிறப்புப்பாயிரம் ஆகியன குறித்து விளக்கப்பட்டுள்ளது. அவற்றுள் ஏழு நூற்பாக்களை நம் பாடப்பகுதியில் பார்ப்போம்.

Related topics

Have a question about this topic?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →