பிம்பம் XI Std Tamil மாதிரி இல்லை. தேவையில்லை என்று நினைத்தது போலும். உள்ளே போன து, எதையோ கையில் எடுத்துக்கொண்டு வெளியே வந்து என்முன் நின்றது. ’இது என்ன?’ - அது கேட்டது.
இது அப்பா வின் சட்டை. முக்கால் கைச்சட்டை என் அளவுக்கு ரொம்பத் தொள தொளவென்று இருக்கும். என்போல் மூவர் ஒரே சமயத்தில் நுழையலாம். அவ்வளவு பெரிசு.
பல இடங்களில் துணி நைந்து கிழிஞ்சு போச்சு. பல இடங்களில் ஒட்டு. கொஞ்சம் வேகமாகவோ முரட்டுத்தனமாகவோ கையாண்டால் கிழியும் என்பது நிச்சயம். துவைக்காததால் எழும் துர்வாசம் இதனோடயே ஐக்கியமாகிப் போச்சு.
‘ இதை இன்னமும் எதற்கு வைத்திருக்கிறாய்..’ அது கேட்டது. ’உபயோ கப்படுத்தத்தான்’ – நான் சொன்னேன். ‘ இதை இன்னுமா உபயோ கப் படுத்துகிறாய்? ’ அதன் புருவம் மேலே உயர்ந்தது.
‘ஆம். பல சமயங்களில், சந்தர்ப்பங்களில்’ ‘உன்னிடம் உன் சட்டை இருக்குமே...? ’ இருக்கும். .
. அதோடு இதையும் அவ்வப்போ து உபயோ கப் படுத்திக்கொள்கிறேன்.’ அது பதில் வேண்டியது. சொல்லலாமா என்று யோசித்தேன். சொல்லத்தான் வேண்டும்.
அதுக்கு என்னில் அறியாதது எதுவுமே இல்லை என்கிற பயம் என்னை உசுப்பியது. மேலும், அதன் சம்பாஷணை என் சுகம், அதன் சிநேகிதமான பார்வை, எனக்குத் தூண்டில். எனவே, என் பதில் எனக்கு ஆறுதல். சொன்னேன்.
’ என் சட்டை என்னை முழுதும் போர்த்தாதபோது அப்பாவின் சட்டையை நான் அணிந்துகொள்வேன். அவர் சட்டையைப் போட்டுக்கொண்டால் என் குளிரை அது போக்கி விடுகிறது. அதோடு பல சமயங்களில் என்னைப் பாதுகாக்கிறது. இது எனக்குக் கவசம்.
இதுவே எனக்கு அம்பு. இதுவே எனக்கு அட்சயப் பாத்திரம். இப்போது தைத்த என் சட்டை புது மோஸ்தர். இது சமயங்களில் என்னை இறுக்கிக்கொள்கிறது.
உனக்குத் தெரியாதா...’ நான் பரிதாபத்தோடு சொன்னதை அது பார்த்திருக்கக் கூடும். ‘சரி’ என்று அறைக்குள் சென்று சட்டையைப் போட்டுவிட்டு வெளியே வந்தது. என் வாசலை மிகவும் ஒட்டி இரண்டு அறைகள். முதல் அறைக்குள் அது என் அனுமதி இன்றியே போய் எதையோ தூக்கிக் கொண்டு வெளியே வந்தது.
‘இது என்ன?’ இது ஒரு கவுன்... ஏழெட்டு வயசுப் பெண் குழந்தைகள் கவுன். கால மறைவாலும் மாற்றத்தாலும் பழசாகித் தேய்ந்து, நைந்து போய் இருந்தது. இன்றைய குழந்தைகள் நினைத்துக்கூடப் பார்க்க முடியாத வினோதமான தையலும் பூவளையுமாய் மிளிர்ந்தது.
‘இந்தக் கவுன் உனக்கெதுக்கு?’ ’சமயா சமயங்களில் போட்டுப் பார்த்துக் கொள்ளத்தான்.’ ’இதைக் கூடவா நீ போடுகிறாய்?’ ‘சொல்றேனே... சமயா சமயங்கள்.’ ‘இதைப் போட்டுக்கொண்டு எப்படி வெளியே வருகிறாய். ஒரு ஆண் மகனாய் எப்படி வெளியே பிரவேசிக்கிறாய்...’ ’ இந்த கவுன் அம்மா எனக்காக வாங்கியது. அம்மாவின் உதரத்தில் பெண் குழந்தைகள் ஜனிக்கவில்லை.’ ஜனித்தாலும் லபிக்கவில்லை.
ஆணாகப் பிறந்த என்னை அம்மா தன் ஆசைக்காக இந்த கவுனுக்குள் அடக்கி வளர்த்தாள். காலப்போக்கில் வளர்ந்து வந்த என் பெள ருஷ ஆகிருதியை இந்தச் சின்ன கவுனுக்குள் நுழைத்து நுழைத்து அதில் வெற்றி கண்டாள். நான் சாமானியத்தில் அதனுட்கொள்ளவில்லை. எனினும், எப்படியோ என்னை நுழைப்பதில் XI Std Tamil அவள் திருப்தி கொண்டாள்.
பதின்வயதின் இளைஞனாகிய நான் அந்த கவுனில் நூதனமாக எனக்கே காட்சி கொடுத்தேன். அம்மா என்னை ஒரு போட டோ எடுத்தாள். ஒரு பிரதியை இந்த