📖 Samacheer Kalvi · 11th TN - English Medium · Tamil · Page 104question

தமிழகக் கல்வி வரலாறு · Part 2

Chapter 2: Front Matter · Tamil

தமிழகத்தின் கல்வி வரலாற்றுக்குச் செய்த பெரும்பங்கினை விளக்குகிறது. மரபுவழிக் கல்வி முறைகள் (அ) குருகுலக் கல்விமுறை இம்முறையில் மாணவர்கள் ஆசிரியர்களை அணுகி அவருடன் பல ஆண்டுகள் தங்கி, அவருக்குத் தேவைப்படும் பணிகள ச் செய்து கல்வி கற்றனர். செய்து கற்றல், வாழ்ந்து கற்றல், எளிமையாக வாழ்தல் என்ற அடிப்படையில் இக்குருகுலக் கல்விமுறை அமைந்திருந்தது. இம்முறை, போதனா முறையைத் தாண்டி வாழ்வியலைக் கட்டமை ப்பதில் சிறப்பானதாக விளங்கியது.

(ஆ) திண்ணைப் பள்ளிக் கல்விமுறை 19ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் ஊர்கள் தோறும் பெருமளவில் திண்ணைப் பள்ளிகள் இருந்தன. அவற்றினைத் தெற்றிப் பள்ளிகள் என்றும் அழைத்தனர். திண்ணைப் பள்ளிக்கூட ஆசிரியர்கள் கணக்காய ர்கள் என்றே அழைக்கப்பட்டனர். அக்கா லக் கல்விமுறை, திண்ணைப் பள்ளிமுறை என்றே தமிழகத்தில் அழைக்கப்பட்டது.

இப்பள்ளிகள் ஒரேமாதிரியான வரன்முறையுடன் செயல்படவில்லை. எனவே, ஆங்கிலேயர்கள், திண்ணைப் பள்ளிகள், பாட சாலைகள், மக்தாபுகள், மதரஸாக்கள் போன்ற கல்வி அமைப்புகள நாட்டுக்கல்வி (Indigeneous Education) என்று அழைத்தனர். இப்பள்ளிகளில் பாடத்திட்டம், பள்ளி நேரம், பயிற்றுவிக்கும்முறை ஆகியன ஆசிரியரின் விருப்பப்படியே அமைந்திருந்தன. ஆயினும் பொ துமக்களுடைய கல்வித்தேவையை இப்பள்ளிகள் ஓரளவேனும் நிறைவு செய்தன.

‘ரெவரெண்ட் பெல்’ என்ற ஸ்காட்லாந்து பாதிரியார் தமிழகத் திண்ணைப் பள்ளிக் கல்விமுறையைக் கண்டு வியந்தார். இம்முறையில் அமைந்த ஒரு பள்ளியை ஸ்காட்லாந்தில் ‘மெட்ராஸ் காலேஜ்’ என்னும் பெயரில் நிறுவினார். அங்கு இக்கல்விமுறை மெட்ராஸ் சிஸ்டம், பெல் சிஸ்டம் மற்றும் மானிடரி சிஸ்டம் என்றும் அழைக்கப்பட்டது. தெரியுமா?

XI Std Tamil சென்னை மாகாணத்தில் , திண்ணைப் பள்ளிகள் இயங்கி வந்தன என்றும் அவற்றின் கல்வித்தரம் பல ஐரோப்பிய நாடுகளின் அப்போதைய கல்வித்தரத்தைக் காட்டிலும் உயர்ந்ததாகவே காணப்பட்டது என்றும் தாமஸ் மன்றோ காலத்தில் நடத்திய ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது. (இ) உயர்நிலைக் கல்விமுறை தனிநிலையில் புலவர்களிடத்துக் கற்கும் உயர்நிலைக் கல்விமுறை என்ற வகைமைக்குள் இக்கல்விமுறை அடங்கும். திருவாவடுதுறை ஆதீன மடத்தின் தலைமைப்புலவராக விளங்கிய மகாவித்துவான் மீனாட்சிசுந்தரனாரிடம் தமிழ்த்தாத்தா உ. வே.

சாமிநாதர் இம்முறையில்தான் பாடம் பயின்றார். தமிழகத்தில் ஐரோப்பியர்களின் கல்விப்பணி ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஜெர்மனி நாட்டவரான ஜான் கூட்டன்பர்க் (Johannes Gutenberg) வடிவமைத்த அச்சு இயந்திரம் கல்வி பெருகக் காரணமாயிற்று. கி.பி. (பொ.ஆ.) 1706ஆம் ஆண்டு முதல் டச்சுக்காரர்களின் சமயப் பரப்புச் சங்கம் தமிழகத்தில் முதன்முதலாகக் கல்விப் பணியில் ஈடுபட்ட து.

தரங்கம்பா டியில் முதன்முதலில் அச்சுக்கூடத்தை ஏற்படுத்தி, மாணவர்களுக்குத் தேவையான புத்தகங்களை அச்சடித்தனர். இந்தியாவில் முதன்முதலில் அச்சேறிய மொழி தமிழே ஆகும். டச்சுக்காரர்கள் அறப்பள்ளிகள (Missionary Schools) நிறுவியதோடு ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள யும் அமைத்தனர். 1813ஆம் ஆண்டு சாசனச் சட்டப்படி லண்டன் பாராளுமன்றம், இந்தியர்களின் கல்விக்காக ஆண்டுக்கு லட்சம் ரூபாய் ஒதுக்கியது.

அக்காலத்தில் இந்தியாவில் தாய்நாட்டு இலக்கியங்களையும் கீழைத்தேசத்துக் கலைகள யும் பயிற்றுவிக்க வேண்டும் என்னும் கொள கை கொண்ட வர்கள் கீழைத்தேயவாதிகள் (Orientalists) என்று அழைக்கப்பட்டனர். மாறாக, மேற்கத்தியக் கல்விமுறையான ஆங்கிலவழிக் கல்விமுறை மூலமாகவே இந்தியர்களை முன்னேற்ற முடியும் என்று ஒரு சாரார் வாதிட்டனர். இவர்கள் மேற்கத்தியவாதிகள் (Anglicists) கணக்காயர் இல்லாத ஊரும் பிணக்கறுக்கும் மூத்தோரை இல்லா அவைக்களனும் – பாத்துண்ணும் தன்மை யிலாளர் அயலிருப்பும் இம்மூன்றும் நன்மை பயத்தல் இல் (திரிகடுகம் – ) தமிழகத்தில் விடுதலைக்கு முன் கல்வி வளர்ச்சி ஆண்டு நிகழ்வு

Related topics

Have a question about this topic?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →