📖 Samacheer Kalvi · 11th TN - English Medium · Tamil · Page 103poem

கேடில் விழுச்செல்வம்

Chapter 2: Front Matter · Tamil

கேடில் விழுச்செல்வம் XI Std Tamil கல்வியின் நோக்கம் நாகரிகத்தையும் பண்பாட்டையும் வளர்ப்பதாகும். பன்னெடுங்காலமாக முன் னோர்களால் வளப்ப டுத்தப்பட்ட அறிவாற்றலையும் அனுபவத்தையும் ஒவ்வொரு தனிமனிதனும் பெறுமாறு செய்வதுமாகும். ஒருவரின் வாழ்க்கை முழுவதும் தொடர் நடைமுறையாகத் திகழும் கல்வியானது சமூக மாற்றத்தின் இன்றியமையாக் காரணியாகவும் விளங்குகிறது. கல்வியின் முதன்மை நோக்கமான, ‘தனிமனிதனைச் சமுதாயத்துக்கு ஏற்றவனாக மாற்றுதல்’ என்னும் சீரிய பணியில் தமிழகம் கடந்து வந்த பாதை பHோற்றுதலுக்குரியது. வாழ்க்கையை நடத்துவதற்கான அடிப்படைத் திறன்களை வளர்ப்பதற்கு ஒவ்வொரு சமூகத்திலும் வயதில் மூத்தவர்களால் கதைக ள், கருத்துகள்வ ழி வாழ்க்கை நெறிகள் மற்றும் உலகப்பார்வை சார்ந்த கருத்துகள் கற்பிக்கப்பட்டு வருகின்றன. அவை கற்பவர் மனத்தில் ஆழப் புதைந்துள்ள திறன்களைத் தோண்டி வெளிக்கொ ண்டு வருவதால் ‘கல்லுதல்’ என்ற பொ ருளின் அடிப்படையில் கல்வி என வழங்கலாயிற்று. ‘கல்வியில் சிறந்த தமிழ்நாட்டில்’ காலந் தோறும் மக்களின் தேவைகளுக்கேற்பக் கற்றலும் கற்பித்தலும் பல்வே று பரிமாணங்களைப் பெற்று வளர்ந்துள்ளன. தமிழ் இலக்கியங்களில் கல்வி பண டைத் தமிழ் இலக்கண நூலான தொல்காப்பியம், கல்வி கற்பதற்காகப் பிரிந்து செல்வதை ஓதற்பிரிவு (தொல். அகத். ) எனக் குறிப்பதோடு எண்வகை மெய்ப்பாடு பற்றிக் கூறும்போது கல்வியின் பொ ருட்டு ஒருவருக்கு, ‘ பெருமிதம்’ தோன்றும் ( தொல். மெய். ) என்றும் கூறுகிறது. தொல்காப்பியமும் நன்னூலும் ஆசிரியர்கள், மாணவர்களுக்கா ன இலக்கணங்களை வகுத்துள்ளன. சங்க இலக்கியங்களும் கல்வியின் சிறப்பைப் பெரிதும் போற்றுகின்றன. “ உற்றுழி உதவியும் உறுபொ ருள் கொடுத்தும், பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே!” (புறம். , ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்) என்ற புறநானூற்று அடிகள் பொருள் கொடுத்தும் தொண்டு செய்தும் ஆசிரியரிடம் மாணவர்கள் கல்வி கற்றதைச் சிறப்புடன் குறிக்கின்றன. சங்க காலத்தவர் குடும்பம், அரசு, சமூகம் என்ற மூன்று நிலைகளிலும் சிறப்பினைப் பெறக் கல்வி தேவை என்பதனை உணர்ந்து கற்றனர். “ சங்ககாலத் தமிழகத்தில் தமிழ் ஆட்சி மொழியாக, பயிற்று மொழியாக, இலக்கிய மொழியாக விளங்கியுள்ளது; தமிழகம் அப்போது பெற்றிருந்த அரசியல் கல்வியின் சிறப்பு துணையாய் வருவது தூயநற் கல்வி - திருமந்திரம். கல்வி அழகே அழகு – நாலடியார் இளமையில் கல் – ஒளவை யார்.

Related topics

Have a question about this topic?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →