📖 Samacheer Kalvi · 11th TN - English Medium · Tamil · Page 114question

இதழாளர் பாரதி

Chapter 2: Front Matter · Tamil

இதழாளர் பாரதி XI Std Tamil பங்கும் இடம்பெற வேண்டும் என்ற உந்துதல் ஏற்படுகின்றது. பாரதி யானை மிதித்துச் சாகவில்லை, வறுமை மிதித்துச் செத்தார் என எங்கேயோ கவித்துவமாகப் படித்த நினைவு. இத்தனை வாழ்க்கைப் போ ராட்டத்திலும் உலகப் பார்வை கொண்ட வராகப் பாரதி இருந்ததை நினைத்தால் வியப்பாய் இருக்கிறது. படை ப்பாளர்களும் சிந்தனையாளர்களும் கொண்டா டப்படவேண்டும்.

இனி, எந்த ஓர் ஆளுமையையும் இத்தகைய நிலையில் நாம் விட்டுவிடக்கூடாது. சர்வஜன மித்திரன், ஞானபாநு, காமன் வீல், கலை மகள், தேசபக்தன், கதாரத்னாகரம் போன்ற இதழ்களிலும் பாரதி தம் படைப்புகள வெளியிட்டுள்ளார். இத்தனைக்கும் பாரதிக்கு எப்படி நேரம் இருந்ததோ? ‘நேர மேலாண்மையே பாதி வெற்றி’ என நீங்கள் கூறுவதை இப்பொழுதும் நினைவுகூர்கிறேன் அப்பா.

தம் பெயரை யும் தம்மையும் முன்னிலைப்படுத்திக்கொள்ள விரும்பும் மனிதர்களுக்கிடையில் “தான்” என்ற ஒன்றை ஒழித்தவர் பாரதி. ஆங்கிலேயர்களின் கெடுபிடிகள ல், விடுதலை வேட்கையூட்டும் கருத்துகள் மக்கள ச் சென்றடைந்தால் போதும் என்று எண்ணி இளசை சுப்ரமணியன், சாவித்திரி, சி.சு. பாரதி, வேதாந்தி, நித்திய தீரர், உத்தமத் தேசாபிமானி, ஷெல்லிதாசன், காளிதாசன், சக்திதாசன், ரிஷிகுமாரன், காசி, சரஸ்வதி, பிஞ்சுக்காளிதாசன், கிருஷ்ணன் எனப் பல புனைபெய ர்களில் எழுதியுள்ளார். கருத்துடன் காட்சியும் இடம்பெறுவது வாசகர்களைக் கவரும்தானே அப்பா.

பாரதி அன்றே தாம் பணியாற்றிய இதழ்களில் கருத்துப்படங்களையும் கேலிச்சித்திரங்களையும் வெளியிட்டுள்ளார். தமிழ் இதழியல் துறையில் முதன்முதலாகக் கருத்துப் படங்களை அறிமுகப்படுத்தியவர் பாரதிதானே! லண்டன் பஞ்ச், இந்தி பஞ்ச் முதலிய கருத்துப்படங்களைக்கொண்ட இதழ்களைப் பார்த்த பாரதி, தமிழில் ‘சித்திராவளி’ என்ற பெய ரில் கருத்துப்படங்களை மட்டுமே கொண்ட இதழ் ஒன்றையும் நடத்த விரும்பினார். அதைச் செயல்படுத்த முடியாவிட்டாலும் இந்தியா, விஜயா ஆகிய இரு இதழ்களிலும் கருத்துப்படங்களை வெளியிட்டுள்ளார்.

காட்டின் நெருக்கமான வழிகளில் யானை நடக்கும் தடத்தைப் பின்பற்றிப் பிற விலங்குகளும் அப்பாதையில் சுலபமாக நடக்கும். அதைப்போலவே இதழியலில் பாரதியின் தடம்பற்றி நடந்தவர்கள் பலர் இருந்தனர். அவர்களுள் பாரதியிடம் துணையாசிரியர்களாகப் பணியாற்றியவர்களான பி.பி. சுப்பையா, ஹரிஹரர், என்.

நாகசாமி, வ. ராமசாமி, பரலி. சு. நெல்லையப்பர், கனகலிங்கம் போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

ஆங்கிலக் கலப்பின்றித் தமிழில் பேசுவதையே வியப்பாகப் பார்ப்பவர்களுக்கு இடையில் தமிழ் இதழ்களில் தமிழ் ஆண்டு, திங்கள், நாள் ஆகியவற்றை முதன்முதலாகக் குறித்தவர் XI Std Tamil பாரதி. அவரது மூச்சும் பேச்சும் பணியும் தமிழின் வளர்ச்சியை முன்னிட்டே இருந்திருப்பது என்போன்ற இளையோருக்கு, இன்றைக்கு நினைத்தாலும் பெரும் ஊக்கமாக உள்ளது. அப்பா, உங்களுக்கு ஒன்று தெரியுமா? பெண் விடுதலைக்குப் பாடுபட்ட பாரதி பெண்களுக்காகத் தமது ‘சக்ரவர்த்தினி’ இதழில் குறள் வெண்பா எழுதியுள்ளார்.

அக்குறள், பெண்மை அறிவுயரப் பீடோங்கும் பெண்மைதான் ஒண்மை யுறஓங்கும் உலகு. எடுத்துக்கொண்ட ஒவ்வொரு செயலிலும் தமது கொள கையையும் உணர்வையும் வெளிப்படுத்தும் பண பைப் பாரதியிடமிருந்து இளைய சமுதாயம் கற்றுக்கொள்ள வேண்டும். பாரதியைப் போன்றே பிற ஆளுமைகள் பற்றியும் நீங்கள் கூறியதுண்டு. பிற அறிஞர்களின் பலதுறை அறிவையும் கற்றுப் போற்ற வேண்டியது இன்றைய தேவை.

எனக்கு ஓர் ஐயம் உண்டு. “ இந்தியா ” இதழைச் சிவப்பு வண்ணத்தாளில் ஏன் பாரதி வெளியிட்டார் அப்பா? அதை அறிந்து கொள்ள ஆவல். பாரதியைப் பற்றிக் கூடுதலாகத் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வம் பன்மடங்காகியுள்ளது.

தங்களின் பதில் கடிதத்தில் எழுதுவீர்களென்று நம்புகிறேன். பாரதியைப் படித்ததில் அவரைப் பற்றிப் பகிர்ந்து

Related topics

Have a question about this topic?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →