📖 Samacheer Kalvi · 11th TN - English Medium · Tamil · Page 129grammar_exercise

நாளெல்லாம் வினைசெய்

Chapter 2: Front Matter · Tamil

நாளெல்லாம் வினைசெய் XI Std Tamil பன்மொழிப் புலமையும் பல்துறை ஆளுமையும் கொண்ட ஆனந்தரங்கர் புதுச்சேரி வரலாற்றினைப் பதிவு செய்தவர்களில் முதன்மையானவர். அவருடைய நாட்குறிப்பு, 18ஆம் நூற்றாண்டின் புதுவை வரலாற்றினை அறிந்துகொள்ள நமக்குக் கிடைத்த அரிய பெட்டகமாகும். புதுச்சேரியில் பிரெஞ்சு ஆட்சியின் எழுச்சியும் வீழ்ச்சியும் அவரின் வாழ்வோடு ஒன்றியிருப்பது ஓர் அரிய நிகழ்வு. நாட்குறிப்பு என்பது தனிமனிதர் ஒருவரின் அன்றாட நிகழ்வுகளை அல்லது பணிகளைப் பதிவு செய்யும் ஏடாகும்.

இதனை ஆங்கிலத்தில் ‘டைரி’ என்று அழைப்பர். டைரியம் என்னும் இலத்தீன் சொல்லின் மூலமான ‘டைஸ்’ என்ற சொல்லில் இருந்து இச்சொல் உருவாயிற்று. நாட்குறிப்புகளின் முன்னோடியாகத் திகழ்வது EPHEMERIDES என்று அழைக்கப் பெறும் கிரேக்கக் குறிப்பேடு ஆகும். இச்சொல் ‘ஒரு நாளுக்கான முடிவு’ என்னும் பொருளைத் தரும்.

முகலாய மன்னர்களில் பாபர் காலம் முதல் நாட்குறிப்பு எழுதும் வழக்கம் இருந்து வந்துள்ளது. ஔரங்கசீப் ஆட்சிக்காலத்தில் நாட்குறிப்பு எழுதுவது தடை செய்யப்பட்டிருந்தது. இல் ஐரோப்பா விலிருந்து இந்தியாவுக்குக் கடல்வழியைக் கண்டுபிடித்த போர்ச்சுகீசிய மாலுமி வாஸ்கோடகாமா நாட்குறிப்பு எழுதும் பழ க்கம் உள்ளவர். அவருடைய நாட்குறிப்புகள் ஆல்வாரோ வெல்லோ என்பவரால் பதிவு செய்யப்பட்டுள்ளன.

ஆனந்தரங்கர் 18ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். பிரெஞ்சுக் கிழக்கிந்தியக் குழுமத்தின் மொழிபெயர்ப்பாளராகவும் துய்ப்ளே என்ற பிரெஞ்சு ஆளுநரின் மொழிபெயர்ப்பாளராகவும் பணியாற்றியவர். இவருடைய நாட்குறிப்புகள் ஆண்டுகாலத் தென்னிந்திய வரலாற்றை வெளிப்படுத்துவதோடு. அக்காலத்திய பிரெஞ்சு அரசு பற்றி அறிய உதவும் சிறந்த வரலாற்று ஆவணமாகவும் இலக்கியமாகவும் திகழ்கின்றன.

ஆனந்தரங்கர் பிரான்சுவா மர்த்தேனுக்குப் பிறகு கியோம் ஆந்த்ரே எபேர் புதுச்சேரியின் தலைமை ப் பொறுப்பினை ஏற்றார். அவர்தம் தரகராக ‘நைனியப்பர்’ நியமிக்கப்பட்டார். நைனியப்பரின் மைத்துனர் திருவேங்கடம் என்பவரின் மகன் ஆனந்தரங்கர். இவர் 1709ஆம் ஆண்டு மார்ச்சு திங்கள் 30ஆம் நாள் சென்னையிலுள்ள பெர ம்பூரில்

Related topics

Have a question about this topic?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →