religious science. The practices of their religion (Buddhism) are derived from India. They believe that it is the Indians who brought idols to them and that the latter were their religious educators. In China and in India they believe in metempsychosis.
The Chinese and Indians draw from the same religious principles different conclusions. In India medicine and philosophy are practiced. The Chinese practice medicine equally. Their chief treatment is cauterization.
The Chinese practice astronomy but the Indians practice this science still more. Written by Abu Zayd Al Sirafi, traveler, th century. - Foreign notices of South India by K.A. Neelakanda sastri சீனாவுக்கென்று தனியாக மதங்கள் இல்லை.
இந்தியாவின் மதத்தை ( பH த்தம்) அவர்கள் கடைப்பிடிக்கின்றனர். சிலைகளைத் தங்களுக்கு அறிமுகம் செய்தோர் இந்தியர்கள் என்று நம்பும் சீனர்கள், இந்தியர்களே தங்களின் மத ஆசிரியர்கள் என்றும் கருதுகின்றனர். இந்தியாவிலும் சீனாவிலும் மரணத்துக்குப் பின்னான மறுபிறப்பை நம்புகின்றனர். ஒரே மத கோட்பாடு இருந்தாலும், சீனர்களும் இந்தியர்களும் வெவ்வேறு தீர்மானங்களுக்கு வருகிறார்கள்.
இந்தியாவில் மருத்துவமும், தத்துவமும் நடைமுறையில் உள்ளன. அவர்களுக்குச் சமமாகச் சீனர்களும் மருத்துவத்தை நடைமுறையில் வைத்திருக்கிறார்கள். ‘தீய்த்தல்’ அவர்களது பிரதான சிகிச்சை முறை. சீனர்கள் வானியல் சாஸ்திரப் பயிற்சியில் ஈடுபடுகிறார்கள்.
ஆனால் இந்த அறிவியலை இந்தியர்கள் இன்னும் அதிகமாய்ப் பயன்படுத்துன்றனர். Religion ------------------- Medicine --------------- Philosophy ------------------- Science ---------------- Idols -------------- XI Std Tamil கீழ்க்காணும் பத்தியில் உள்ள உருவக ங்களையும் உவமைகளை யும் பட்டியலிடுக. உருவகங்களை உவமைகளாக மாற்றுக. உவமைகளை எவ்வகை உவமைகள் என்று எழுதுக.
விழிச்சுடர் வாசலில் உட்கார்ந்திருந்தாள். அவளது எண்ணவலையில் மின்னல்களைப் போன்ற சொற்கள் தோன்றி மறைந்தன. அடுக்கிவைக்கப்படாத புத்தகங்களைப்போலக் குழம்பிய எண்ணங்களை ஒழுங்குபடுத்த நினைத்தாள். நேரம் நத்தையைப்போல மெதுவாக நகர்ந்தது.
அண்ணாந்து பார்த்தாள். நீலப்பட்டு உடுத்தியதைப் போன்ற வானம் அம்மாவை நினைவூட்டியது. பூனைக்குட்டியைப்போல அம்மாவின் முந்தானைக்குள் சுருண்டுகொள்ள நினைத்தாள். பூனைக்குட்டியை மடியில் வைத்துக்கொண்டதைப்போல அம்மாவின் கதகதப்பை உணர்ந்தாள்.
பசிக்கயிற்றால் சுண்டிவிடப்பட்டவள், பூட்டியிருந்த வீட்டுக்கதவின்மேல் சாய்ந்தபடி அம்மாவின் வருகைக்காகக் காத்திருக்கத் தொடங்கினாள். கீழ்க்காணும் பத்திகளைப் படித்து மூன்றில் ஒரு பங்காகச் சுருக்கி எழுதுக. கல்வி என்றால் என்ன? அது நூல்கள ப் படிப்பதா?
அல்லது அது பலவகைய னதைக் குறித்த அறிவா? அதுவும் இல்லை. எத்தகைய பயிற்சியின்மூலம் மனத்தின் ஆற்றலும் அது வெளிப்படும் தன்மையும் கட்டுப்பாட்டிற்கு உட்படுத்தப்பட்டுப் பய ன்தரும் வகையில் அமைகிறதோ, அந்தப் பயிற்சிதான் கல்வியாகும். அக்கல்வி வளர்ச்சிக்கு ஒரே ஒரு வழிதான் உண்டு.
அதுதான் மனத்தை ஒருமுகப்படுத்தும் பயிற்சி. கல்வியின் நோக்கம் செய்திகள ப் பற்றிய அறிவைச் சேமிப்பதன்று. கல்வியின் நோக்கமே மனத்தை ஒருமுகப்படுத்துவதுதான். மனவொருமைப்பாடே கல்வியின் அடிப்படை.
எல் லோரும் தங்கள் அறிவு வளர்ச்சிக்கு அம்முறையைத்தான் பின்பற்றியாக வேண்டும். மனத்தை ஒருமுகப்படுத்தும் அளவுக்கு அறிவும் வளரும். இயற்கையால் மூடப்பட்டிருக்கும் அறிவுச்சுடரைத் திறப்பதற்கு இதுவொன்றே சிறந்த வழியாகும். மனிதன் தன் சக்தியை நூற்றுக்குத் தொண்ணூறு விழுக்காடு வீண் செய்து விடுகிறான்.
இதனால்தான், அவன் அடிக்கடி தவறுகள் செய்கிறான். பண்புடைய