அரசியல்
Chapter 11: அரசியல் · ADVANCED TAMIL · TA medium
From your actual textbook ✓
What does your textbook say about அரசியல்?
இயற்கை அல்லது செயற்கைக் காரணங்களால் மக்களுக்குத் தீங்கு நேரினும் மன்னனே அதற்குப் பொறுப்பேற்றான். தன் குடிகளையும் படைகளையும் காத்து நிற்க வேண்டியது அரசனது கடமை . தன் குடிகளைக் காக்கத் தவறும் மன்னனை உலகம் பழிக்கும் என்று புலவர்கள் நேரடியாக மன்னனுக்கு அறிவுறுத்திய காட்சிகளைச் சங்க இலக்கியங்களில் காணமுடிகிறது. யாண்டுபல வாக நரையில ஆகுதல் யாங்கு ஆகியர் எனவினவுதிர் ஆயின் மாண்டஎன் மனைவியொடு மக்களும் நிரம்பினர் யான்கண் டனையர்என் இளையரும் வேந்தனும் அல்லவை செய்யான் காக்கும் அதன்தலை ஆன்றுஅவிந்து அடங்கிய கொள்கைச் சான்றோர் பலர்யான் வாழும் ஊரே.
📖 Class 12 Advance Tamil 2024 Edition www.tntextbooks.in · Page 19
Read from the source
Complete lesson
இயற்கை அல்லது செயற்கைக் காரணங்களால் மக்களுக்குத் தீங்கு நேரினும் மன்னனே அதற்குப் பொறுப்பேற்றான். தன் குடிகளையும் படைகளையும் காத்து நிற்க வேண்டியது அரசனது கடமை . தன் குடிகளைக் காக்கத் தவறும் மன்னனை உலகம் பழிக்கும் என்று புலவர்கள் நேரடியாக மன்னனுக்கு அறிவுறுத்திய காட்சிகளைச் சங்க இலக்கியங்களில் காணமுடிகிறது. யாண்டுபல வாக நரையில ஆகுதல் யாங்கு ஆகியர் எனவினவுதிர் ஆயின் மாண்டஎன் மனைவியொடு மக்களும் நிரம்பினர் யான்கண் டனையர்என் இளையரும் வேந்தனும் அல்லவை செய்யான் காக்கும் அதன்தலை ஆன்றுஅவிந்து அடங்கிய கொள்கைச் சான்றோர் பலர்யான் வாழும் ஊரே.
- புறநானூறு ஆசிரியர்: பிசிராந்தையார் திணை: பொதுவியல் துறை: பொருண்மொழிக் காஞ்சி பாடல்பொருள்: “தங்களுக்கு இவ்வளவு வயதாகியும் தாங்கள் எப்படி நரையில்லாமல் இருக்கிறீர்கள்?” என்று கேட்பீரானால், சொல்கிறேன். “நற்குணத்தளாகிய என் மனைவியோடு, என்னுடைய மக்களும் அறிவு நிரம்பப் பெற்றவர்கள். என்னிடம் பணி புரிபவர்களும் நான் நினைப்பதையே தாங்களும் நினைத்துச் செயல்களைச் செய்து முடிப்பர். என் வேந்தன் முறையல்லாதவற்றைச் செய்யாமல் நாட்டைக் காப்பவனாக விளங்குகின்றான்.
நான் வாழும் ஊரில், மாட்சிமைக்குரிய நற்குணங்களும் நல் லொழுக்கங்களும் நிறைந்து ஐம்புலன்களையும் வென்று, பணிவோடும் சிறந்த கொள்கைகளோடும் வாழும் சான் றோர்கள் பலர் உள்ளனர்.
Related topics
Want this shaped for your exam marks?
Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.
Ask AI about this topic →