generic · 12th TN - English Medium · ADVANCED TAMIL · Page 13grammar_exercise

செவ்வியல் இலக்கியங்கள்

Chapter 3: செவ்வியல் இலக்கியங்கள் · ADVANCED TAMIL · TA medium

From your actual textbook ✓

What does your textbook say about செவ்வியல் இலக்கியங்கள்?

பழைமையும் இலக்கிய இலக்கணப் பாரம்பரியமும் உள்ள மொழிகளே செவ்வியல் மொழிகள். செவ்வியல் இலக்கியங்களைப் பெற்றிருக்கும் பழைமையான மொழிகளைச் செவ்வியல் மொழிகள் என்று கூறலாம். ஒருமொழி நிலைத்து நிற்பதற்கு அதன் பழைமையும் வளமையும் மட்டும் போதாது. அம் மொழி பேச்சு மொழியாக, எழுத்து மொழியாக, ஆட்சி மொழியாக, நீதிமன்ற மொழியாக, பயிற்று மொழியாக நிலை பெற்றிடல் வேண்டும். இலக்கிய வளம், இலக்கண அரண், மிகுந்த சொல்வளம், வரலாற்றுப் பின்னணி, தனித்தியங்கும் மாண்பு, காலத்திற்கேற்ற புதுமை எனப் பல வகைகளிலும் சிறப்புப் பெற்றிருத்தல் வேண்டும். தமிழுக்கு இவை அனைத்தும் பொருந்தும். எழுத்து உருவான பின்னரே ஒரு மொழி முழுமை அடைகிறது. அதன் பின்னரே அது வளர்ந்து செழுமையுற்றுச் செவ்வியல் இலக்கியங்களைப் படைக்கும் திறன் பெறுகிறது.

📖 Class 12 Advance Tamil 2024 Edition www.tntextbooks.in · Page 13

Read from the source

Complete lesson

பழைமையும் இலக்கிய இலக்கணப் பாரம்பரியமும் உள்ள மொழிகளே செவ்வியல் மொழிகள். செவ்வியல் இலக்கியங்களைப் பெற்றிருக்கும் பழைமையான மொழிகளைச் செவ்வியல் மொழிகள் என்று கூறலாம். ஒருமொழி நிலைத்து நிற்பதற்கு அதன் பழைமையும் வளமையும் மட்டும் போதாது. அம் மொழி பேச்சு மொழியாக, எழுத்து மொழியாக, ஆட்சி மொழியாக, நீதிமன்ற மொழியாக, பயிற்று மொழியாக நிலை பெற்றிடல் வேண்டும்.

இலக்கிய வளம், இலக்கண அரண், மிகுந்த சொல்வளம், வரலாற்றுப் பின்னணி, தனித்தியங்கும் மாண்பு, காலத்திற்கேற்ற புதுமை எனப் பல வகைகளிலும் சிறப்புப் பெற்றிருத்தல் வேண்டும். தமிழுக்கு இவை அனைத்தும் பொருந்தும். எழுத்து உருவான பின்னரே ஒரு மொழி முழுமை அடைகிறது. அதன் பின்னரே அது வளர்ந்து செழுமையுற்றுச் செவ்வியல் இலக்கியங்களைப் படைக்கும் திறன் பெறுகிறது.

செவ்வியல் இலக்கியங்களைப் படைக்க இன்றியமையாதது, எழுத்து வடிவமே. அவற்றோடு அரசியல், பொருளாதாரம்,

Related topics

Want this shaped for your exam marks?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →