generic · 12th TN - English Medium · ADVANCED TAMIL · Page 36grammar_exercise

அறிவPோம் தெளிவோம்

Chapter 36: அறிவPோம் தெளிவோம் · ADVANCED TAMIL · TA medium

From your actual textbook ✓

What does your textbook say about அறிவPோம் தெளிவோம்?

அறிவPோம் தெளிவோம் பழங்காப்பிய மரபைப் பின்பற்றிய காப்பியங்களும், புதுக்கவிதை போன்ற புதிய மரபைப் பின்பற்றிய காப்பியங்களும் இருபதாம் நூற்றாண்டில் படைக்கப்பட்டன. பாரதியின் பாஞ்சாலி சபதம், குயில்பாட்டு, பாரதிதாசனின் பாண்டியன் பரிசு, புரட்சிக்கவி, வீரத்தாய் போன்றன இவ்வகையில் அடங்குவன. கவிமணி தேசிக விநாயகம் எழுதிய மருமக்கள்வழி மான்மியம், கண்ணதாசனின் ஆட்டனத்தி ஆதிமந்தி, இயேசு காவியம், மாங்கனி, முடியரசனின் பூங்கொடி, வீரகாவியம், கவியோகி சுத்தானந்த பாரதியின் பாரதசக்தி மகாகாவியம், சாலை இளந்திரையனின் சிலம்பின் சிறுநகை, புலவர் குழந்தையின் இராவண காவியம் போன்ற காப்பியங்கள் பழங்காப்பிய மரபைப் பின்பற்றிப் படைக்கப்பட்டவை.

📖 Class 12 Advance Tamil 2024 Edition www.tntextbooks.in · Page 36

Read from the source

Complete lesson

அறிவPோம் தெளிவோம் பழங்காப்பிய மரபைப் பின்பற்றிய காப்பியங்களும், புதுக்கவிதை போன்ற புதிய மரபைப் பின்பற்றிய காப்பியங்களும் இருபதாம் நூற்றாண்டில் படைக்கப்பட்டன. பாரதியின் பாஞ்சாலி சபதம், குயில்பாட்டு, பாரதிதாசனின் பாண்டியன் பரிசு, புரட்சிக்கவி, வீரத்தாய் போன்றன இவ்வகையில் அடங்குவன. கவிமணி தேசிக விநாயகம் எழுதிய மருமக்கள்வழி மான்மியம், கண்ணதாசனின் ஆட்டனத்தி ஆதிமந்தி, இயேசு காவியம், மாங்கனி, முடியரசனின் பூங்கொடி, வீரகாவியம், கவியோகி சுத்தானந்த பாரதியின் பாரதசக்தி மகாகாவியம், சாலை இளந்திரையனின் சிலம்பின் சிறுநகை, புலவர் குழந்தையின் இராவண காவியம் போன்ற காப்பியங்கள் பழங்காப்பிய மரபைப் பின்பற்றிப் படைக்கப்பட்டவை. யாப்பு வடிவத்தை உடைத்து வளர்த்தெடுக்கப்பட்ட புதுக்கவிதைகளிலும் காப்பியங்கள் தற்காலத்தில் படைக்கப்படுகின்றன.

பாரதியின் வாழ்க்கை வரலாற்றைப் புதுக்கவிதை வடிவில் கவிராஜன் கதை என்னும் பெயரில் காப்பியமாகப் படைத்துள்ளார் வைரமுத்து. கவிஞர் வாலி இராமாயணத்தை அவதார புருஷன் என்ற பெயரிலும், மகாபாரதத்தைப் பாண்டவர் பூமி என்ற பெயரிலும் புதுக்கவிதை வடிவில் காப்பியமாக்கியுள்ளார். பக்திமை - விளக்கம் கடவுளை வணங்குதல், கடவுளிடம் தன்னை அர்ப்பணித்தல் என்னும் பொருளில் இன்று ’பக்தி’ என்னும் சொல் பயன்படுத்தப்படுகிறது. கடவுளின் மீது மனிதன் கொண்ட நம்பிக்கையைப் பக்தி என்பர்.

பக்தியால் அன்பு பெருகி உயிர் தூய நிலையை அடைகிறது. கடவுளின் மீது மனிதன் கொண்டுள்ள எல்லைகடந்த அன்பே ’பக்தி’ என்ற பொருளில் தமிழிலக்கியங்களில் மிகுதியும் கையாளப்படுகின்றது.

Related topics

Want this shaped for your exam marks?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →