விளிம்புநிலை வாழ்வியல் புதினங்கள் வாழ்க்கை அனுபவங்கள் தந்த நேரடியான வலிகளையும் தங்கள் மீதான ஒடுக்குமுறைகளையும் அவற்றிலிருந்து மீளத்துடிக்கும் உணர்வுகளையும் பதிவு செய்பவை விளிம்புநிலை வாழ்வியல் படைப்புகள். விளிம்புநிலை மாந்தர்களின் உரிமைகளைப் பேசும் புதினங்கள் தமிழில் பெருவாரியாகத் தEோன்றியுள்ளன. பாமா எழுதிய கருக்கு, சங்கதி, வன்மம் போன்றவை விளிம்புநிலைப் படைப்புகளில் முக்கியமானவை. நுட்பமான, நம்பகமான கதாபாத்திர வார்ப்போடு விளிம்புநிலை பற்றி இமையத்தின் படைப்புகள் பேசுகின்றன. ’கோவேறு கழுதைகள்’ இவரது முதல் படைப்பு. செடல், ஆறுமுகம், எங்கதெ, செல்லாத பணம் ஆகியன இவரது முக்கியமான புதினங்கள். சிவகாமியின் ஆனந்தாயி, பழையன கழிதலும், சோ.தர்மனின் கூகை, தூர்வை, ஸ்ரீதர கணேசனின் உப்புவயல், அழகியபெரியவனின் தகப்பன் கொடி போன்ற புதினங்கள் விளிம்புநிலை வாழ்வியலைப் பேசுவன.
📖 generic · 12th TN - English Medium · ADVANCED TAMIL · Page 58poem
விளிம்புநிலை வாழ்வியல் புதினங்கள்
Chapter 69: படிப்போம் பயன்படுத்துவPோம் · ADVANCED TAMIL
Related topics
Have a question about this topic?
Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.
Ask AI about this topic →