பெருங்கதை
Chapter 33: பெருங்கதை · ADVANCED TAMIL · TA medium
From your actual textbook ✓
What does your textbook say about பெருங்கதை?
பெருங்கதை வடஇந்தியப் பகுதிகளைக் களமாகக் கொண்டு தமிழ்ச் சாயலோடு படைக்கப்பெற்ற முதல் தமிழ்க் காப்பியம் பெருங்கதை. இக்காப்பியத்தை இயற்றியவர் கொங்குவேளிர். உதயணன் என்னும் காவியத் தலைவனின் வாழ்க்கையை விவரித்துச் செல்கிறது இந்நூல். இதற்குக் கொங்குவேள் மாக்கதை, உதயணன் கதை என்ற வேறு பெயர்களும் உள்ளன. குணாட்டியர் என்பவர் பிருகத்கதா எனும் நூலைப் பைசாச மொழியில் இயற்றினார். இக்காப்பியமே பெருங்கதையின் மூல நூலாகக் கருதப்படுகிறது. பெருங்கதை சமண சமயக்காப்பியமாகும். இந்நூல் ஆறு காண்டங்களை உடையது. உதயணன் செல்லும் வழியிலுள்ள நருமதை என்னும் பேராற்றின் எழில் இங்கு அழகாகக் காட்டப்படுகின்றது.
📖 Class 12 Advance Tamil 2024 Edition www.tntextbooks.in · Page 34
Read from the source
Complete lesson
பெருங்கதை வடஇந்தியப் பகுதிகளைக் களமாகக் கொண்டு தமிழ்ச் சாயலோடு படைக்கப்பெற்ற முதல் தமிழ்க் காப்பியம் பெருங்கதை. இக்காப்பியத்தை இயற்றியவர் கொங்குவேளிர். உதயணன் என்னும் காவியத் தலைவனின் வாழ்க்கையை விவரித்துச் செல்கிறது இந்நூல். இதற்குக் கொங்குவேள் மாக்கதை, உதயணன் கதை என்ற வேறு பெயர்களும் உள்ளன.
குணாட்டியர் என்பவர் பிருகத்கதா எனும் நூலைப் பைசாச மொழியில் இயற்றினார். இக்காப்பியமே பெருங்கதையின் மூல நூலாகக் கருதப்படுகிறது. பெருங்கதை சமண சமயக்காப்பியமாகும். இந்நூல் ஆறு காண்டங்களை உடையது.
உதயணன் செல்லும் வழியிலுள்ள நருமதை என்னும் பேராற்றின் எழில் இங்கு அழகாகக் காட்டப்படுகின்றது. கல்லுட் பிறந்த கழுவாக் கதிர்மணி மண்ணுட் பிறந்த மாசறு பசும்பொன் வேயுட் பிறந்த வாய்கதிர் முத்தம் வெதிரிற் பிறந்த பொதியவி ழருநெல் மருப்பினுட் பிறந்த மண்ணா முத்தம் வரையிற் பிறந்த வயிரமொடு வரன்றி நருமதை என்னும் ஆறானது ஒளிபொருந்திய மணி, பொன், முத்து, நெல், வைரம் என அனைத்தையும் தன்னுள் கொண்ட வளமுடையது என்பதை இப்பாடல் நிறுவுகிறது. குற்றங்களை அகற்ற வேண்டும்; முறை தவறி நடப்பாரைத் திருத்த வேண்டும்; யாவரிடமும் மெய்யான அன்பு செலுத்த வேண்டும்; மாந்தர்தம் அறியாமை போக்க வேண்டும் என்று பல உலக நீதிகளை இந்த நூல் எடுத்துரைக்கிறது. ஆடுவார் காண்பா ரவரருகே தான்சென்று தோடுவார்ந் தாலொப்பச் சொல்விரிப்பான் போற்பாவம் கூடுவார் கூடாதார் கொன்றார்தின் றாரென்னும் சேடனார்க் காண்டுநா மென்றுதான் சென்றாளே
Related topics
Want this shaped for your exam marks?
Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.
Ask AI about this topic →