generic · 12th TN - English Medium · ADVANCED TAMIL · Page 16poem

பிரிவாற்றாமை

Chapter 8: பிரிவாற்றாமை · ADVANCED TAMIL · TA medium

Read from the source

Complete lesson

பிரிவாற்றாமை பழந்தமிழர், திருமணத்திற்கு முந்தைய காதல் வாழ்வை, ’களவொழுக்கம்’ என்றும், திருமணத்திற்குப் பிறகு அவர்களின் இல்லற வாழ்வை, ’கற்பொழுக்கமென்றும்’ போற்றியுள்ளனர். களவொழுக்கத்தின் போது, தலைவனைப் பிரிந்த தலைவி பிரிவாற்றாமையால் வருந்தியிருப்பாள். அவளின் பிரிவுத்துயரத்தைப் போக்கும் மருந்தாகப் பாங்கி விளங்குகிறாள். தலைவிக்குப் பாங்கி போல தலைவனுக்குப் பாங்கன் இருப்பான். யானே ஈண்டையேனே என் நலனே ஏனல் காவலர் கவண் ஒலி வெரீஇக் கான யானை கை விடு பசும் கழை மீன் எறி தூண்டிலின் நிவக்கும் கானக நாடனொடு ஆண்டு ஒழிந்தன்றே! - குறுந்தொகை ஆசிரியர் : மீனெறிதூண்டிலார் திணை : பாலை கூற்று : தலைவி கூற்று பாடல் பொருள்: வினைமேற்சென்ற தலைவனின் பிரிவாற்றாத தலைவி, ”காட்டு யானையானது தான் வளைத்த மூங்கிலைத் தினைப்புனம் காக்கும் காவலர்களின் கவண் ஒலிக்குப் பயந்து விட்டுவிடுகின்றது. அந்த மூங்கிலானது தூண்டில் போட்டு மீன் பிடிப்பவன், மீன் சிக்கியவுடன் தூண்டிலை விரைந்து மேலே தூக்கினாற்போலச் சட்டென்று மேலே போகின்றது. இத்தகைய காட்சியையுடைய மலைநாடனொடு நான் நட்பு கொண்டதால் இன்று நலிவடைகிறேன். அவன் என்னை வரையாது காலம் தாழ்த்துவதால்,

Related topics

Want this shaped for your exam marks?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →