கவிதையியல்
Chapter 43: Front Matter · ADVANCED TAMIL · TA medium
Read from the source
Complete lesson
கவிதையியல் பண்டைய கால மக்களின் தEொன்மை, நாகரிகம், பண்பாடு, அம்மக்கள் பேசிய மொழியின் சிறப்பு முதலானவற்றைத் தெளிவுற விளக்கி நிற்கும் காலப்படிமங்களாக அமைபவை அம் மொழியின் இலக்கியங்களே. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உலகுபோற்றும் உயர்ந்த வாழ்வியல் நெறிகளோடு வாழ்ந்தவர்கள் தமிழர்கள் என்ற உண்மையைப் பறைசாற்றி நிற்பன சங்க இலக்கியங்கள். அச்சங்க இலக்கியங்களின் செவ்வியல் தன்மை, அறக்கவிதைகளின் இயல்பு, காப்பியங்களின் வகைமை, பக்தி இலக்கியத்தின் சால்பு, சிற்றிலக்கிய பெருமை முதலானவற்றை விளக்கி இவ்வியல் அமைகிறது. இவ்வியலைக் கற்பதன் மூலம் தமிழ்க் கவிதைகளின் உலகளாவிய தன்மை, பாடுபொருள், வடிவ ஒழுங்கு, பாவகைகள், இலக்கிய வகைமைகள் முதலானவற்றை அறிந்துகொள்ளலாம் கவிதையியல் கவிதை, கதை, நாடகம், கட்டுரை என்ற நான்கும் இலக்கிய வடிவங்களாக உள்ளன. இவ்வடிவங்களுக்குள் பல வகைகள் இருக்கின்றன. இவ்விலக்கியவடிவங்கள் எவ்வாறு உருவாக்கப்படுகின்றன, அவற்றிற்குள்ளிருக்கும் வகைகள் எவ்வாறு வேறுபடுகின்றன எனப் பேசுவது இலக்கியவியல் படிப்பு. படைப்பா ளன் தன் கருத்துகளை உணர்ச்சிகளோடு வெளிப்படுத்தும் வடிவம் கவிதை. பேசுபவர், எதிர் வினையாற்றுபவர் ஆகிய இருவருக்குமான உரையாடல் வடிவம் நாடகம். படைப்பாளரே அனைத்துப் பாத்திரங்களையும் இயங்கச் செய்யும் வடிவம் கதை. படைப்பாளன் தன் கருத்துகளை முன்னிலைப்படுத்தி எழுதும் வடிவம் கட்டுரை. இவ்வாறு கவிதை, நாடகம், கதை, கட்டுரை என்பனவற்றை இலக்கியவியல் வகைப்படுத்துகிறது. இலக்கியவியல் பற்றிய பேச்சு என்பது தமிழில் செய்யுளாகவே தEொடங்குகிறது. தEொல்காப்பியச் செய்யுளியல் கவிதையின் வடிவம், உள்ளடக்கம், வெளிப்பாட்டு முறை என அனைத்துக் கூறுகளையும் விளக்குகிறது. தமிழின் தE ல்லிலக்கணமான தEொல்காப்பியம் மூன்று அதிகாரங்களில் ஐவகை இலக்கணங்களைக் கூறுகிறது. எழுத்ததிகாரத்தில் எழுத்துகளின் ஒலி மற்றும் வரிவடிவங்களின் தEோற்றம், வகை, அளவு, எழுத்துகள் சொல்லாக மாறுதல், சொற்கள் புணர்தல் போன்றவை விளக்கப்படுகின்றன. சொல்லதிகாரத்தில் சொற்களின் வகை, உருபுகள், சொற்கள் இணைந்து தEொடராக மாறுதல் போன்றவை விளக்கப்படுகின்றன. இவை பெரும்பாலும் நேர்ப்பொருளைத் தரக்கூடிய பேச்சு மொழிக்கும் எழுத்து மொழிக்கும் உரியன. பொருளதிகாரம் நேர்ப்பொருள் தரும் சொற்றொடர் பற்றிப் பேசாமல் புனைவாக உருவாக்கப்படும் சொற்றொடர்களின் மொழியையும் அதன் பொருளையும் பேசுகின்றது. தEொல்காப்பியர் காலத்தில் புனைவாக உருவாக்கப்படும் மொழி, பா- ஆகவும், பாடல்-ஆகவும், பாட்டு – ஆகவும் அறியப்பட்டன. பா, பாடல், பாட்டு ஆகியவை எவ்வாறு உருவாக்கப்பட வேண்டும்? அதற்குள்ளே இடம்பெற வேண்டிய கூறுகள் எவை? அக்கூறுகளின் வழியாகக் கிடைக்கும் நுட்பங்கள் என்ன? என்பதையெல்லாம் பொருளதிகாரம் விரிவாக விளக்குகிறது. இவையே பின்னர் பாவியல் எனவும், கவிதையியல் எனவும் வரையறுக்கப்பட்டன. செய்யுளியலில் ஒரு பாவின் உறுப்புகள் என வரையறை செய்துள்ள தEொல்காப்பியம் அடிகளின் அளவு, அடிவரையறை, உண்டாக்கப்படும் ஒலியளவு போன்றவற்றையும் விரிவாகப் பேசுகின்றது. அவற்றைப் பாக்களின் புறவடிவம் எனக் கொள்ளலாம். புறவடிவத்தில் உள்ள வேறுபாடுகளின் அடிப்படையில் பாக்கள் வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா என வகைப்படுத்தப்படுவதை இவ்வியல் வழி அறிகிறோம். இப்புறவடிவங்களின் வழியாக உருவாக்கப்படும் இலக்கிய வகைகளின் வடிவங்களை, பாட்டு உரை நூலே வாய்மொழி பிசியே அங்கதம் முது சொல்லொடு அவ்வேழ் நிலத்தும் வண்புகழ் மூவர்தண் பொழில் வரைப்பின்
Related topics
Want this shaped for your exam marks?
Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.
Ask AI about this topic →