generic · 12th TN - English Medium · ADVANCED TAMIL · Page 24grammar_exercise

இருநானூறு

Chapter 17: இருநானூறு · ADVANCED TAMIL · TA medium

From your actual textbook ✓

What does your textbook say about இருநானூறு?

இருநானூறு திருக்குறளுக்கு அடுத்த நிலையில் வைத்து எண்ணத்தக்கது நாலடியார் ஆகும். நாலடி, நாலடி நானூறு, வேளாண்வேதம் என்று வெவ்வேறு பெயர்களாலும் இந்நூல் சுட்டப்ப டுகின்றது. சமணமுனிவர்களால் பாடப்பட்ட வெண்பாக்களின் தEொகுப்பே இந்நூல். இதனைத் தEொகுத்தவர் பதுமனார். இந்நூலைப் போன்றே வெண்பாக்களால் ஆனது பழமொழி நானூறு. ஒவ் வொரு பாடலின் இறுதியிலும் ஒரு பழமொழி அமையப் பாடப்ப ட்டிருப்பதால் இந்நூல் இப்பெயர் பெற்றது. இந்நூலை இயற்றியவர் முன்றுறையரையனார். வாழ்க்கையின் எல்லா இன்னல்களுக்கும் காரணமான அறியாமையாகிய மயக்கத்தைத் தீர்ப்பது கல்வி. இக்கருத்தை விளக்கும் நாலடியார் பாடல் நோக்கத்தக்கது.

📖 Class 12 Advance Tamil 2024 Edition www.tntextbooks.in · Page 24

Read from the source

Complete lesson

இருநானூறு திருக்குறளுக்கு அடுத்த நிலையில் வைத்து எண்ணத்தக்கது நாலடியார் ஆகும். நாலடி, நாலடி நானூறு, வேளாண்வேதம் என்று வெவ்வேறு பெயர்களாலும் இந்நூல் சுட்டப்ப டுகின்றது. சமணமுனிவர்களால் பாடப்பட்ட வெண்பாக்களின் தEொகுப்பே இந்நூல். இதனைத் தEொகுத்தவர் பதுமனார்.

இந்நூலைப் போன்றே வெண்பாக்களால் ஆனது பழமொழி நானூறு. ஒவ் வொரு பாடலின் இறுதியிலும் ஒரு பழமொழி அமையப் பாடப்ப ட்டிருப்பதால் இந்நூல் இப்பெயர் பெற்றது. இந்நூலை இயற்றியவர் முன்றுறையரையனார். வாழ்க்கையின் எல்லா இன்னல்களுக்கும் காரணமான அறியாமையாகிய மயக்கத்தைத் தீர்ப்பது கல்வி.

இக்கருத்தை விளக்கும் நாலடியார் பாடல் நோக்கத்தக்கது. இம்மை பயக்குமால் ஈயக் குறைவின்றால் தம்மை விளக்குமால் தாமுளராக் கேடின்றால் எம்மை உலகத்தும் யாம்காணேம் கல்விபோல் மம்மர் அறுக்கும் மருந்து. - நாலடியார் கல்வியின் சிறப்பை விளக்குவதாக அமைந்த இச்செய்யுளில் உவமையோ பிற இலக்கியச் சிறப்புகளோ அமையாவிட்டாலும், கூறுவதைச் செறிவாக, சிறப்பாகச் சொல்லும் தன்மை அமைந்திருப்பதைக் காணலாம். தனக்கு உதவி செய்தவர்களுக்குத் தீங்கு செய்வது தனக்கே தீங்கு செய்துகொள்வதற்கு ஒப்பாகும் என்ற கருத்தை பழமொழி நானூற்றுப் பாடலொன்று கூறுகிறது.

நாடி நமரென்று நன்கு புரந்தாரைக் கேடு பிறரோடு சூழ்தல் கிளர்மணி நீடுகல் வெற்ப நினைப்பின்றித் தாமிருந்த கோடு குறைத்து விடல். - பழமொழி நானூறு தமக்கு உதவியவர்களுக்கு அவரின் பகைவரோடு சேர்ந்து தீங்கிழைப்பது, ஒருவன் உணர்வின்றித் தான் தங்கியிருந்த கிளையின் அடியை வெட்டி வீழ்த்தி உயிர்விடுதலைப் போன்றதாகும்.

Related topics

Want this shaped for your exam marks?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →