சொற்பொருள் மாற்றம் பொருளை உணர்த்துவதற்குச் சொற்கள் கருவிகளாக உள்ளன. அவை, பொருளை வெளிப்படையாகவும் குறிப்பாகவும் உணர்த்துகின்றன. அனைவருக்கும் தெரிந்த சொற்களால் அறியப்படும் பொருள்கள் வெளிப்படையாக உணரப்படுவன. சூழ்நிலை அறிந்து நுட்பமாக அறியப்படும் பொருள்கள் குறிப்பாக உணரப்படுவன. ஆகுபெயர், அன் மொழித்தொகை , சிலேடை, உருவகம், குழூஉக்குறி, மங்கலம், இடக்கரடக்கல் முதலியவை குறிப்பால் பொ ருள் உணர்த்துகின்றன என்று மொழியியல் அறிஞர்கள் கூறுகின்றனர். சொற்பொருள் மாற்றத்திற்குப் புறஉலகு, அதன் நிகழ்வுகள், சமுதாயம், பண்பாடு, பேசுபவரின் உணர்வு, மனநிலை, பேச்சுச்சூழல் முதலிய பல காரணங்கள் உள்ளன. இவற்றோடு பிறமொழிகளின் தாக்கங்களும் காரணங்களாக அமைகின்றன. இவற்றின் அடிப்படையிலேயே மொழியில் பயன்படுத்தப்படும் சொற்கள், தE டர்கள் ஆகியவற்றின் பொ ருளில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. இனி, சொற்பொருள் எவ்வாறெல்லாம் மாற்றம் பெற்றுள்ளது என்பதைப் பின்வரும் தலைப்புகளில் காண்போம்.
📖 generic · 12th TN - English Medium · ADVANCED TAMIL · Page 186poem
சொற்பொருள் மாற்றம்
Chapter 69: படிப்போம் பயன்படுத்துவPோம் · ADVANCED TAMIL
Related topics
Have a question about this topic?
Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.
Ask AI about this topic →