📖 generic · 12th TN - English Medium · ADVANCED TAMIL · Page 247

மாதிரி நிகழ்ச்சித் தEொகுப்புரை

Chapter 69: படிப்போம் பயன்படுத்துவPோம் · ADVANCED TAMIL

மாதிரி நிகழ்ச்சித் தEொகுப்புரை மாவட்ட விளையாட்டு அரங்கம் இன்று புதுபொலிவோடு காணப்பட்டது. மாவட்டத்தின் பல்வேறு பள்ளிகளில் இருந்து மாணவர்கள் மகிழ்வோடு வந்தவண்ணம் இருந்தனர். வழியெங்கும் வண்ணக் கோலங்களும் மாவிலைத் தோரணங்களும் புன்னகையோடு அனைவரையும் வரவேற்றன. பெரிய வரவேற்புப் பலகை ஒன்று வைக்கப்பட்டிருந்தது.

அதில் மாவட்ட ஆட்சியாளர் அவர்களால் இளம் சாதனையாளர்களுக்கான விருது வழங்கும் விழா என்ற வாசகம் மனத்தை மகிழ்விக்கும் வகையில் அமைந்திருந்தது. விழா மேடையினை வண்ண விளக்குகள் அலங்கரித்துக்கொண்டிருந்தன. விழா நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குவதற்காக ஆம் வகுப்பு மாணவி மலர்விழி வரவழைக்கப்பட்டிருந்தார். மாணவர்களும், பெற்றோர்க ளும் பார்வையாளர்களும் ஆவலோடு எதிர்பார்த்த விழா தொடங்கியது.

விழா தொகுப்பாளர் மலர்விழி ஒலிவாங்கியைக் கையில் ஏந்தியவாறு மேடையில் பேசத் தொடங்கினார். மலர்விழி: வருங்கால இந்தியாவின் சாதனை மலர்களாய் மணம் வீசக் காத்திருக்கும் மாணவ சகோதர சகோதரிகளே! சாதனையாளர்களை ஈன்றெடுத்த பெற்றோர்களே ! இவ்விழாவினைக் காண வந்துள்ள நல் உள்ளங்களே!

ஊடக அன்பர்களே! உங்கள் அனைவருக்கும் என் பணிவான வணக்கம். தற் பொழுது மாவட்ட அளவில் பல்வேறு துறைகளில் சாதனைகள் புரிந்த இளம் சாதனையாளர்களுக்கான விருது வழங்கும் விழா நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. நிகழ்ச்சியில் முதலாவதாகத் தமிழ்த்தாய் வாழ்த்து (அனைவரும் எழுந்து நின்று தமிழ்த்தாய் வாழ்த்து பாடுகின்றனர்) மலர்விழி: விழாவிற்கு வருகை தந்துள்ள அனைவரையும் வரவேற்க நமது மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஐயா அவர்களை அழைக்கிறேன்.

(முதன்மைக் கல்வி அலுவலர் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்துகிறார்.) மலர்விழி: வரவேற்புரை வழங்கிய முதன்மைக் கல்வி அலுவலர் ஐயா அவர்களுக்கு நன்றி. அடுத்ததாக பூஞ்சோலை அரசு உயர்நிலைப் பள்ளி மாணவிகள் பரதநாட்டியப் பாடலுக்கு வரவேற்பு நடனம் ஆடி நம்மை மகிழ்விக்க வருகின்றனர் . (மாணவிகளின் நடன நிகழ்ச்சி) மலர்விழி: குட்டித் தேவதைகள் நம் அனைவரையும் இசை உலகிற்கு அழைத்துச் சென்று இன்ப வெள்ளத்தில் நீந்த வைத்துவிட்டனர். நம் அனைவரின் கரவொலியினை அவர்களின் நடனத்திற்கு பரிசளிப்போம்.

அடுத்ததாக, மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் விழாப் பேருரையாற்றி இளம் சாதனையாளர்களுக்கு விருதுகளை வழங்க வருகிறார். (மாவட்ட ஆட்சியர் அவர்களின் விழாப் பேருரை) 12th Std - Advance Tamil - Chaper - - :

Related topics

Have a question about this topic?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →