📖 generic · 12th TN - English Medium · ADVANCED TAMIL · Page 181grammar_exercise

மொழிபெயர்க்கும்போது நேரும் தவறுகள்

Chapter 69: படிப்போம் பயன்படுத்துவPோம் · ADVANCED TAMIL

மொழிபெயர்க்கும்போது நேரும் தவறுகள் தமிழையும் ஆங்கிலத்தையும் கற்கும் மாணாக்கர், தEொடரமைப்புகளில் தம்மையறியாமல் சில தவறுகளைச் செய்கின்றனர். இஃது ஒரு மொழியின் தாக்கம், மற்றொரு மொழியின் மீது ஏற்படுவதனால் நேர்கிறது. எடுத்துக்காட்டாக ஆங்கிலத்தில், Niraimathi, Kavitha and Kumaran went to school என்னும் தEொடரைத் தமிழில் நிறைமதி, கவிதா மற்றும் குமரன் பள்ளிக்குச் சென்றனர் என்று பேச்சிலும் எழுத்திலும் மாற்றுகின்றனர். ‘and‘ என்னும் இணைப்புச்சொல்லுக்கு மாற்றாக, ‘மற்றும்‘ என்னும் இணைப்புச்சொல்லைத் தமிழில் பயன்படுத்துகின்றனர்.

ஆனால், தமிழ்த் தEொடரமைப்பில் ஒன்றிற்கு மேற்பட்ட பெயர்கள் இடம்பெறும்போது, அவையாவும் ‘உம்‘என்ற இடைச்சொல்லாலேயே இணைக்கப்படுகின்றன. ஆகவே, மேற்கூறிய தEொடரை நிறைமதியும் கவிதாவும் குமரனும் பள்ளிக்குச் சென்றனர் எனப் பேச்சிலும் எழுத்திலும் பயன்படுத்தவேண்டும். இதுபோன்று, ஆங்கிலத்தின் தாக்கத்தால் தமிழ்த்தொடரமைப்புகளில் ஏற்படும் தவறுகளைக் கண்டறிந்து. அவற்றைச் சரியான அமைப்பில் மாற்றுவதற்கு அறிதல் வேண்டும்.

Related topics

Have a question about this topic?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →