நிறைவுரை திராவிடமொழிக் குடும்பத்தில் தமிழின் சிறப்புகளைப்பற்றியும் இந்தோ ஐரோப்பியமொழிக் குடும்பத்தில் ஆங்கிலத்தின் சிறப்புகளைப்பற்றியும் இப் பாடப்பகுதி சுருக்கமாக எடுத்துக்கூறுகிறது. தமிழிலும், ஆங்கிலத்திலும் தEொடரமைப்பில் காணப்படும் ஒற்றுமை, வேற்றுமைகளைச் சில எடுத்துக்காட்டுகளுடன் விளக்குகிறது. இப்பாடப்பகுதியின் வாயிலாக, ஒருமொழியுடன் மற்றொ ரு மொழியை ஒப்பிடுவதால் அவற்றின் அமைப்பு, செயல்முறை, மொழிக்கூறுகள், கட்டமைப்புகள், இலக்கணக் கூறுகள், மொழியின் பொதுமைப் பண்புகள் ஆகியவற்றை அறிந்துகொள்ள முடிகிறது. அதுமட்டுமன்றி, மொழியைப் படைத்த மனிதனின் கூரிய அறிவுத்திறத்தைக் கண்டு, நமக்கு வியப்பும் பெருமிதமும் ஏற்படுகிறது.
மொழிக்கட்டமைப்பின் மீது மனிதன் கொண்டிருந்த ஈடுபாட்டையும் நன்கு புரிந்துகொள்ள முடிகிறது. 12th Std - Advance Tamil - Chaper - - :