📖 generic · 12th TN - English Medium · ADVANCED TAMIL · Page 24poem

மும்மருந்து

Chapter 25: இருநானூறு · ADVANCED TAMIL

மும்மருந்து பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் மருந்துப் பெயர்கள் கொண்ட அறநூல்கள் மூன்று. அதில் முதலாவதாக அமைந்த நூல் திரிகடுகம். சுக்கு, மிளகு, திப்பிலி ஆகிய மூன்றும் கலந்த மருந்து உடல்நோயைத் தீர்ப்பது போல, இந்நூலின் ஒவ் வொரு செய்யுளிலும் உள்ள மூன்று கருத்துகள் உள்ளத்து நோயைத் தீர்ப்பதால் இந்நூல் திரிகடுகம் எனப் பெயர் பெற்றது. வெண்பாக்களைக் கொண்ட இந்நூலின் ஆசிரியர் நல்லாதனார். இரண்டாவதாக அமைந்த நூல் சிறுபஞ்சமூலம். கண்டங்கத்திரி, சிறுவழுதுணை, சிறுமல்லி, பெருமல்லி, நெருஞ்சி ஆகிய ஐந்தின் வேர்கள் கலந்த மருந்து உடலை வலுப்படுத்துவதுபோல, இந்நூலின் ஒவ் வொரு செய்யுளிலும் அமைந்த ஐந்து கருத்துகள் வாழ்வுக்கு வலிமை சேர்ப்பதால் இந்நூல் சிறுபஞ்சமூலம் எனப் பெயர் பெற்றது. வெண்பாக்களைக் கொண்ட இந்நூலின் ஆசிரியர் காரியாசான். மூன்றாவதாக அமைந்தது ஏலாதி. ஏலம், இலவங்கப்பட்டை, நாககேசரம், மிளகு, திப்பிலி, 12th Std - Advance Tamil - Chaper - - :

Related topics

Have a question about this topic?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →