📖 generic · 12th TN - English Medium · ADVANCED TAMIL · Page 28question

காப்பியங்கள்

Chapter 29: காப்பியங்கள் · ADVANCED TAMIL

காப்பியங்கள் கி.பி.12ஆம் நூற்றாண்டில் தEோன்றிய ‘தண்டியலங்காரம்‘ காப்பியத்திற்கு இலக்கணம் வகுத்துள்ளது. ‘ பெருங்காப்பிய நிலை பேசுங்காலை’ எனத் தEொடங்கும் நூற்பா காப்பிய இலக்கணத்தைக் கூறுகிறது. பெருங்காப்பிய நிலை பேசுங்காலை வாழ்த்து வணக்கம் வருபொருள் இவற்றில் ஒன்று ஏற்புடைத்தாகி முன்வர இயன்று நாற்பொருள் பயக்கும் நடைநெறித் தாகித் தன்னிகர் இல்லாத் தலைவனை உடைத்தாய் மலை கடல் நாடு வளநகர் பருவம் இருசுடர்த் தோற்றமென் றினையன புனைந்து நன்மணம் புணர்தல் பொன்முடி கவித்தல் …. இதன்படி பெருங்காப்பியத்தில் இயற்கையை வாழ்த்துதல், தெய்வத்தினை வணங்குதல், உரைக்கும் பொருள் உணர்த்தல் என்னும் மூன்றினுள் ஒன்று முதலில் வரவேண்டும்.

அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கு பொருள்களைப் பெருங்காப்பியம் வலியுறுத்திப் பாட வேண்டும். இந்நான்கினுள் ஒன்றோ, பலவோ குறைந்து வருவதைத் தண்டியாசிரியர் சிறுகாப்பியமென்று கூறுகிறார். பெருங்காப்பியங்கள், எதையும் குறைவின்றிச் செய்துமுடிக்கும் வலிமை வாய்ந்த தன்னிகர் இல்லாத் தலைவனைப் பெற்று அமைதல் வேண்டும். காப்பியம் எழுந்த சூழல் சார்ந்து மலை, கடல், நாடு, நகர் முதலானவற்றின் வருணனைகள் இடம்பெற வேண்டும்.

பின்னர் அந்தந்த நிலத்து மக்களின் வாழ்வியல், சடங்குகள், விளையாட்டுகள், தூது, பயணம், போர், வெற்றி போன்ற செய்திகளைக் கொண்டிருக்க வேண்டும். எண்வகை மெய்ப்பாடுகளைக் கூறும் வகையில் இதன் உள்ளடக்கம் அமைதல் வேண்டும். காப்பியத்தின் பெரும்பிரிவிற்குக் காண்டம், இலம்பகம், பருவம் எனவும் உட்பிரிவிற்குச் சருக்கம், காதை, படலம் எனவும் பெயரிடுவர். தண்டியலங்காரத்திற்கு முன்பே தமிழில் இத்தன்மையுடைய இலக்கியங்கள் தEோன்றி வளர்ந்துள்ளன.

இவை காப்பிய இலக்கணத்தோடு பெரும்பாலும் பொருந்தியும் சிறுபான்மை மாறுபட்டும் அமைந்துள்ளன. அவை தE டர்நிலைச்செய்யுள் என அழைக்கப்பட்டன. அவற்றில் காப்பியச்சுவை சற்றும் குறையாமல் அமைந்திருப்பது சிறப்பு.

Related topics

Have a question about this topic?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →