generic · 12th TN - English Medium · ADVANCED TAMIL · Page 25grammar_exercise

நானாற்பது

Chapter 18: Class 12 Advance Tamil · Part 4 · ADVANCED TAMIL · TA medium

From your actual textbook ✓

What does your textbook say about நானாற்பது?

நானாற்பது நானாற்பது என்று அழைக்கப்படும் நான்கு நூல்களாவன இன்னா நாற்பது, இனியவை நாற்பது, கார் நாற்பது, களவழி நாற்பது. இவற்றுள் முறையே முதலிரண்டும் அறநூல்கள். கார் நாற்பது அகநூல். களவழி நாற்பது புறநூல். இன்னது துன்பம் தரும் என்று கூறும் வெண்பாக்களால் ஆன நூல் இன்னா நாற்பது. இந்நூலின் ஆசிரியர் கபிலர். இன்னதுஇன்னது இன்பம் பயக்கும் என வெண்பாக்களைக் கொண்டு பூதஞ்சேந்தனாரால் பாடப்பட்ட நூல் இனியவை நாற்பது. வாழ்விற்கு இன்பம் பயப்பன இவைஇவை என இனியவை நாற்பது பட்டியலிடுகிறது. இன்னது செய்யாதே என்பதை விட இதைச்செய் என நெறிப்படுத்தும் பாங்கு இந்நூலின் சிறப்பு. கற்றார்முன் கல்வி உரைத்தல் மிகஇனிதே மிக்காரைச் சேர்தல் மிகமாண முன்இனிதே எள்துணை யானும் இரவாது தான்ஈதல் எத்துணையும் ஆற்ற இனிது.

📖 Class 12 Advance Tamil 2024 Edition www.tntextbooks.in · Page 25

Read from the source

Complete lesson

நானாற்பது நானாற்பது என்று அழைக்கப்படும் நான்கு நூல்களாவன இன்னா நாற்பது, இனியவை நாற்பது, கார் நாற்பது, களவழி நாற்பது. இவற்றுள் முறையே முதலிரண்டும் அறநூல்கள். கார் நாற்பது அகநூல். களவழி நாற்பது புறநூல்.

இன்னது துன்பம் தரும் என்று கூறும் வெண்பாக்களால் ஆன நூல் இன்னா நாற்பது. இந்நூலின் ஆசிரியர் கபிலர். இன்னதுஇன்னது இன்பம் பயக்கும் என வெண்பாக்களைக் கொண்டு பூதஞ்சேந்தனாரால் பாடப்பட்ட நூல் இனியவை நாற்பது. வாழ்விற்கு இன்பம் பயப்பன இவைஇவை என இனியவை நாற்பது பட்டியலிடுகிறது.

இன்னது செய்யாதே என்பதை விட இதைச்செய் என நெறிப்படுத்தும் பாங்கு இந்நூலின் சிறப்பு. கற்றார்முன் கல்வி உரைத்தல் மிகஇனிதே மிக்காரைச் சேர்தல் மிகமாண முன்இனிதே எள்துணை யானும் இரவாது தான்ஈதல் எத்துணையும் ஆற்ற இனிது. - இனியவை நாற்பது கற்றறிந்தவர் முன் தான் கற்ற கல்வியைச் சொல்வது மிக இனியது. அறிவால் மேம்பட்ட கல்வியாளரைச் சேர்ந்து பொருந்தியிருப்பது மிகப் பெருமையுடன் முற்றிலும் இனியது.

எள்ளளவாவது, தான் பிறரிடம் இரவாமல் தன் பொருளைப் பிறர்க்குத் கொடுத்து உதவுவது எல்லா விதத்திலும் மிக இனியது.

Related topics

Want this shaped for your exam marks?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →