generic · 12th TN - English Medium · ADVANCED TAMIL · Page 21poem

வீரம்

Chapter 14: வீரம் · ADVANCED TAMIL · TA medium

Read from the source

Complete lesson

வீரம் சங்க காலத்தில் வீரம் முதன்மையாகப் போற்றப்பெற்றது. ஆடவரும், மகளிரும் இயற்கையிலேயே மறப்பண்பு மிக்கவராய் விளங்கியதால் எண்ணற்ற போர்கள் நடைபெற்றன. சமுதாயத்தைப் பாதுகாக்கும் பொறுப்பு அரசனுக்கு இருந்தது. தன் நாட்டுமக்களின் வாழ்க்கை வளமாக அமைவதற்குப் பிறநாட்டுடன் போர் மேற்கொண்டான். போரில் புறமுதுகிடுதல் பெரும்பழியாகக் கருதப்பட்டது. போரில் விழுப்புண்பட்டு உயிர் விடுவதைப் பெருமையாகக் கருதினர். புறப்புண் பெற்றவர்கள் வடக்கிருந்து உயிர்நீத்தலைப் புகழெனக் கருதினர். இவ்வாறு வடக்கிருந்து உயிர் நீத்தலைச் சிறந்த வீரமாக வெண்ணிக்குயத்தியார் பாடுவது இங்கு நோக்கத்தக்கது. நளியிரு முந்நீர் நாவாய் ஓட்டி வளிதொழில் ஆண்ட உரவோன் மருக களிஇயல் யானைக் கரிகால் வளவ சென்று அமர்க்கடந்த நின்ஆற்றல் தோன்ற வென்றோய் நின்னினும் நல்லன் அன்றே கலிகொள் யாணர் வெண்ணிப் பறந்தலை மிகப் புகழ் உலகம் எய்திப் புறப்புண் நாணி வடக்கிருந் தோனே. - புறநானூறு ஆசிரியர்: வெண்ணிக்குயத்தியார் திணை: வாகை. துறை: அரசவாகை. பாடல் பொருள்: களிநடை போடும் யானைமேல் தEோன்றும் கரிகால் வளவ! கடலில் நாவாய் ஓட்டிக் காற்றையே ஆண்ட வலிமையாளர் வழி வந்தவன் நீ. போரில் வென்றாய், அதனால் நீ நல்லவன். எனினும் வெண்ணிப்பறந்தலைப் போரில் உன் வலிமைமிக்கத் தாக்குதலால் புறப்புண்பட்டு அதற்காக நாணி அப்போர்க் களத்திலேயே வடக்கிருந்து உயிர் துறந்த பெருஞ்சேரலாதன் உன்னைக்காட்டிலும் நல்லவன் அல்லனோ? சங்க இலக்கியப் பாடல்க ள் தம் பாடுபொருள்களாலும், திணை, துறை, மரபு முதலியவற்றாலும் சிறப்புற்று விளங்குகின்றன. ஐந்திணையொழுக்கம், இயற்கையைப்போற்றும் பாங்கு, மனிதநெறி கூறும் பான்மை போன்றன தமிழிலக்கியங்களில் விரவியுள்ளன. உவமை, உருவகம், உள்ளுறை, இறைச்சி உள்ளிட்ட உத்திகளைச் சங்கப்புலவர்கள் கையாண்டுள்ள விதமும் போற்றத்தக்கது. நம்மொழியின்கண் அமைந்த செவ்வியல் கவிதைகளை ஆழ, அகலக் கற்று இன்புறுவோம்.

Related topics

Want this shaped for your exam marks?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →