generic · 12th TN - English Medium · TAMIL · Page 169poem

11. செய்ந்நன்றி அறிதல் - எளிய உரை

Chapter 8: 11. செய்ந்நன்றி அறிதல் · TAMIL · TA medium

Read from the source

Complete lesson

. செய்ந்நன்றி அறிதல் - எளிய உரை . கேளாமலே முன்வந்து செய்த உதவிக்கு உலகமும் வானமும் கொடுத்தாலும் ஈடாகா. . நற்சமயத்துச் செய்த உதவி சிறிதாயினும் உலகத்தைவிட மிகச் சிறந்து. . பயன் கருதாது செய்த உதவியின் நன்மை எண்ணிப் பார்ப்பின், கடலினும் பெரியது. . சிறிதளவு நன்மை செய்தாலும் பயனறிந்தோர் பெரிய நன்மையாகக் கருதுவர். . உதவி உதவிய பொருளைப் பொறுத்தன்று; உதவி பெற்றவரின் பண்பினை ப் பொறுத்து. . தூயவர் நட்பை மறவாதே; துன்பத்தில் துணைசெய்தார் நட்பைத் துறவாதே. . துன்பக் கண்ணீரைத் துடைத்தவர் நட்பினை எடுக்கின்ற பிறப்பெல்லாம் எண்ணுவர். . உதவியை மறப்பது என்றும் நல்லதில்லை; உதவாமையை உடனே மறப்பது நல்லது. . ஒருநன்மை செய்தவர் பெருந்தீமை செய்தாலும் அந்நன்மையை நினை க்கவே தீமை மறையும். . எந்த நலத்தை அழித்தாலும் பிழைக்கலாம்; நன்றி கெட்டால் பிழைப்பில்லை.

Related topics

Want this shaped for your exam marks?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →