generic · 12th TN - English Medium · TAMIL · Page 170poem

31. வெகுளாமை - எளிய உரை

Chapter 11: 31. வெகுளாமை · TAMIL · TA medium

Read from the source

Complete lesson

. வெகுளாமை - எளிய உரை . பலிக்குமிடத்துச் சினவாதவனே காப்பவன்; பலியா இடத்து எப்படி நடந்தால் என்ன? . பலிக்காத இடத்துக் கோபிப்பது தீது: பலிக்கும் இடத்தும் அதுபோல் தீயது இல்லை. . யார்மேலும் சினத்தை மறந்து விடுக; மறவாவிடின் தீமைகள் பிறந்துவிடும். . முகமலர்ச்சியையும் அகமலர்ச்சியையும் கொல்லும் சினத்தினும் பிறபகை உண்டோ? . நீ வாழவேண்டின் சினத்தை ஒழிக்க ஒழிக்காவிடின் சினம் உன்னை ஒழிக்கும். . சினத்தீ சினங்கொண்டானையும் கொல்லும்: இனமாகிய துணையையும் எரிக்கும். . சினத்தைப் போற்றிக்கொண்டவன் கெடுவான், தரையைக் குத்தியவனுக்குக் கைவலியாதா? . பூங்கொத்தை நெருப்பில் இட்டாற்போலக் கொடுமைகள் செய்யினும் கோபம் கூடாது. . மனத்தாலும் வெகுளியை மறந்துவிடின் நினை த்த எல்லாம் உடனே கிடைக்கும். . சினத்தில் மிக்கவர் செத்தவர்க்கு ஒப்பாவார்: சினத்தை விட்டவர் துறவியர்க்கு ஒப்பாவார்.

Related topics

Want this shaped for your exam marks?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →