46. சிற்றினம் சேராமை - எளிய உரை
Chapter 14: 46. சிற்றினம் சேராமை · TAMIL · TA medium
Read from the source
Complete lesson
. சிற்றினம் சேராமை - எளிய உரை . பெரியவர் சிறியவரோடு பழக அஞ்சுவர்; சிறியார் சிறியாரையே உறவு கொள்வர். . மழை தான்விழுந்த மண்தன்மையைப் பெறும். அறிவு சேர்ந்த குழுத்தன்மையைப் பெறும். . மக்கட்கு மனத்தால் உணர்ச்சி உண்டாம்: சேர்க்ககையால் உரிய மதிப்பு உண்டாம். . அறிவு மனத்தை ஒட்டியது போல் தோன்றும்; உண்மையில் பழகும் இனத்தை ஒட்டியது. . மனத் தூய்மை செயல் தூய்மை இரண்டும் நல்ல கூட்டுறவால் வரும். . நன்மனத்தார்க்குப் பின்வழி நன்றாகும்: நல்லினத்தார்க்கு எல்லாமே நன்றாகும். . நன்மனம் உயிர்க்கு ஆக்கம் தரும்: நற்கூட்டு எல்லாப் புகழும் தரும். . சான்றோர்க்கு மனம் நல்லதாக இருப்பினும் இனமும் நல்லதாக இருப்பது சிறப்பு. . நம்மனத்தால் மறுமை யின்பம் கிடைக்கும்: அதற்கும் நற்கூட்டு நல்லது. . நல்ல சேர்க்ககையினும் சிறந்த துணை யில்லை; கெட்ட சேர்க்ககையினும் வேறு கேடில்லை.
Related topics
Want this shaped for your exam marks?
Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.
Ask AI about this topic →