மெய்ப்பபாடு இவ்வியலில் இடம்பபெற்றுள்ள கவிதைகளும் மாதவியின் அரங்ககேற்றமும் மீரானின் சிறுகதையும் நம் உள்ளத்தில் உணர்ச்சிகளை உண்டடாக்குகின்றன என்பதை அறிவீர்கள் அல்லவா? நாம் காணும் நாடகம் அல்லது திரைப்படத்தின் ஒரு காட்சி, கேட்கும் பாடல், உரைவீச்சு, படிக்கும் ஒரு செய்யுள், கவிதை, சிறுகதை, நாவல், அன்றறாட வாழ்வில் எதிர்கொள்ளும் அனுபவம் முதலானவை நம் உணர்வுகளின் மீது பல்வவேறு வகையான தாக்கங்களை ஏற்படுத்துகின்றன. உணர்வுநிலையும் உடல்மொழியும் ழல் காரணிகளின் அடிப்படையில்ததான் மனிதர்களிடம் உள்ளம் சார்ந்த மாறுபாடுகள் ஏற்படுகின்றன என்பதை சிக்மண்ட் பிராய்ட் உள்ளிட்ட உளவியல் அறிஞர்கள் கண்டறிந்தனர். இவ்வுண்மமைகளை இரண்டடாயிரம் ஆண்டுகளுக்கு முன்பபே தொல்ககாப்பியர் உணர்ந்து பதிவுசெய்துள்ளளார் என்பதை அறியும் போது, நமக்குப் பெருமித உணர்வு பொங்குகின்றது.
மனிதர்களின் உணர்ச்சிகளை அடையாளம் கண்டு அதற்கு ஏற்றவாறு பெயரிட்டு வெளிப்படுத்திய தொல்ககாப்பியரை உலகின் முதல் மெய்ப்பபாட்டியல் அறிஞர் எனலாம். மனித உள்ளத்துக்குள் எழும் உணர்ச்சிகளின் செயல்பபாட்டடால் நமக்கு அச்சம், சிரிப்பு, சினம், வெறுப்பு முதலானவை தோன்றுகின்றன. உள்ளத்து உணர்வுகளால் தோன்றும் இவை உடல்மொழியாக வெளிப்படுகின்றன. அவ்வவாறு வெளிப்படத் தோன்றும் அடையாளங்களைத் தொல்ககாப்பியம் மெய்ப்பபாடு எனக் குறிப்பிடுகிறது.
மெய்யில் (உடலில்) தோன்றுவதால் மெய்ப்பபாடு ஆயிற்று’ என்பபார் உரையாசிரியர் இளம்பூரணர். உள்ளத்தில் எழும் உணர்வவானது முகத்தின் வழி வெளிப்படுவதால், ‘அகத்தின் அழகு முகத்தில் தெரியும்’ என்பர்.‘ எண்வகை மெய்ப்பபாடு சுவையை நவரசம் ( ஒன்பது) என்று வடமொழி நூல்கள் வகைப்படுத்துகின்றன. இதில் ஒன்பதாவது சுவையாகச் சொல்லப்படும் சாந்தம் (நடுநிலை) என்பது மெய் செயல்படாத நிலையினைக் குறிக்கின்றது. ஆனால், தொல்ககாப்பியர் அதனை ஒரு மெய்ப்பபாடாகக் கொள்ளளாமல், மெய்ப்பபாடுகள் ’எட்டு’ என்று வகைப்படுத்தியுள்ளளார்.
அவை நகை, அழுகை, இளிவரல், மருட்ககை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை என்பனவாகும். ”நகையே அழுகை இளிவரல் மருட்ககை அச்சம் பெருமிதம் வெகுளி உவகை என்று அப்பபால் எட்டடே மெய்ப்பபாடு என்ப.” (தொல். பொருள்.- ) மெய்ப்பபாடு தோன்றும் நிலைக்களன்கள் மெய்ப்பபாடுகள் தோன்றுவதற்குக் காரணமானவற்றறை நிலைக்களன்கள் என்கிறோம். தொல்ககாப்பியர் ‘எட்டுவகையான மெய்ப்பபாடும் பின்வரும் நிலைக்களன்களை அடிப்படையாகக் கொண்டு பிறக்கும்’ என்கிறார்.
நகை நகை என்பது சிரிப்பு. இது மனித இனத்திற்ககே உரிய உயரிய உணர்வு. எள்ளல், இளமை (குழந்ததைத்தனம்), பேதைமை , மடமை ஆகிய நான்கு நிலைகளில் நகை தோன்றும். பேதைமை என்பது அறியாமை.
மடமை என்பது ஒன்றறை வேறொன்றறாக நினைத்து உணர்வது. நகை கவலையை விரட்டும் ஆற்றல் உடையது. அதனால்ததான் திருவள்ளுவர், “இடுக்கண்