Samacheer Kalvi · SSLC - Tamil Medium · Maths · Page 225definition

5.4 கோட்டின் சாய்வு (Inclination of a line)

Chapter 8: Chapter 5 · Maths · TA medium

From your actual textbook ✓

What does your textbook say about 5.4 கோட்டின் சாய்வு (Inclination of a line)?

கோட்டின் சாய்வு அல்லது சாய்வுக் கோணம் (inclination of a line) என்பது X அச்சின் மிகை திசைக்கும், நேர்க்கோட்டிற்கும் இடையே, கடிகார முள்ளின் எதிர் திசையில் அமைந்த கோணம் ஆகும். சாய்வுக் கோணம் q எனக் குறிக்கப்படுகிறது . குறிப்பு ¾ X அச்சு மற்றும் X அச்சுக்கு இணையான நேர்க்கோடுகளின் சாய்வுக்கோணம் ° ஆகும். ¾ Y அச்சு மற்றும் Y அச்சுக்கு இணையான நேர்க்கோடுகளின் சாய்வுக் கோணம் ° ஆகும் . . . நேர்க்கோட்டின் சாய்வு (Slope of a Straight line) சாலைகளை அமைக்கும்போது, எவ்வளவு சாய்வாகச் சாலை இருக்கவேண்டும் என்பதை அறிந்துகொள்ளவேண்டும். அதேபோல மாடிப் படிக்கட்டுகள் அமைக்கும்போதும், அதன் சாய்வுத் தன்மையைக் கருத்தில் கொள்ள வேண்டும்.

📖 Class 10 Mathematics Tamil 2025 Edition www.tntextbooks.in · Page 225

Read from the source

Complete lesson

கோட்டின் சாய்வு அல்லது சாய்வுக் கோணம் (inclination of a line) என்பது X அச்சின் மிகை திசைக்கும், நேர்க்கோட்டிற்கும் இடையே, கடிகார முள்ளின் எதிர் திசையில் அமைந்த கோணம் ஆகும். சாய்வுக் கோணம் q எனக் குறிக்கப்படுகிறது . குறிப்பு ¾ X அச்சு மற்றும் X அச்சுக்கு இணையான நேர்க்கோடுகளின் சாய்வுக்கோணம் ° ஆகும். ¾ Y அச்சு மற்றும் Y அச்சுக்கு இணையான நேர்க்கோடுகளின் சாய்வுக் கோணம் ° ஆகும் .

. . நேர்க்கோட்டின் சாய்வு (Slope of a Straight line) சாலைகளை அமைக்கும்போது, எவ்வளவு சாய்வாகச் சாலை இருக்கவேண்டும் என்பதை அறிந்துகொள்ளவேண்டும். அதேபோல மாடிப் படிக்கட்டுகள் அமைக்கும்போதும், அதன் சாய்வுத் தன்மையைக் கருத்தில் கொள்ள வேண்டும்.

இந்தச் சாய்வுத் தன்மையினால் சாதாரணச் சாலையில் பயணிப்பதைவிட மலை அல்லது மேம்பாலம் ஆகியவற்றில் பயணிப்பது கடினமானதாக உணர்கிறோம். இவையாவிலும் முக்கிய அம்சமாக இருப்பது “சாய்வுத் தன்மை” (steepness) ஆகும். இந்தச் சாய்வுத் தன்மையானது சாய்வு அல்லது சாய்வின் அளவு (Slope or gradiant) என்று அழைக்கப்படுகிறது. சாய்வு என்ற கருத்தானது பொருளாதாரத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஒரு பொருளின் விலைக்கேற்ப அதன் தேவை மாறுபடுவதைக் கணக்கிடுவதில் இந்தக் கருத்து பயன்படுகிறது. சாய்வானது சாய்வுத் தன்மை (steepness) மற்றும் திசை (Direction) என்ற இரு காரணிகளை உள்ளடக்கியதாகும்.

Related topics

Want this shaped for your exam marks?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →