ஆற்றிய உரை ” ஆகாயத் தாமரையை ப் பறித்துக் கொடுக்கும் அற்புதம் அவர் காட்டினாரில்லை. ஆனால், ஊமைகளாக இருந்து வந்த மக்கள ப் பேச வைத்தார். உரிமை முழக்கமிடச் செய்தார். ஆயுதம் தாங்கியவர் எதிரில் சாகப் பயப்படாதாரின் ஓர் அணிவகுப்பை நிறுத்திக்காட்டினார். சிட்டுக் குருவிகளுக்கு வல்லூற்றை எதிர்த்திடும் ஆற்றல் ஏற்படச் செய்தார். இந்தியா என்றோர் நாடுண்டு. அங்கு ஏலம், கிராம்பு பெறுவதுண்டு. பொன்னும் பொருளும் மிக உண்டு. போக்கறியாதார் நிரம்ப உண்டு என்ற அளவில்பதினாறாம் நூற்றாண்டிலே உலகம் அறிந்திருக்கிறது. பிறகு படிப்படியாக இந்தியா பிரிட்டிஷ் பிடியிலே சிக்கிவிட்டது. அப்போது இந்தியா என்றோர் நாடுண்டு, அது ஆங்கிலேயர்க்கு நல்ல வேட்டைக்காடு என்று உலகம் இழித்தும் பழித்தும் பேசிக் கொண்டது. விடிவெள்ளி தோன்றுவது போலத் திலகர் காலத்திலே விடுதலைக்கு முயற்சி செய்யப்பட்டது என்ற போதிலும், காந்தியடிகள் காங்கிரசுக்குள் புகுந்த பிறகே, இந்தியா என்றோர் நாடுண்டு, அங்கு விழிப்பும் எழுச்சியும் மிகஉண்டு என்று அறிந்துகொள்ள முடிந்தது. காந்தியடிகளின் புகழொளி மூலமே, உலகம் இந்தியாவைக் கண்டுவந்தது. தன்னலமற்ற, விளைவு பற்றிய கவலையற்ற போராட்ட மனோபாவத்தை நாட்டிலே காந்தியடிகளால்தான் உண்டாக்க முடிந்தது. அவருடைய உருவமோ உடலமைப்போ பேச்சோ நடவடிக்கையோ இராணுவ மனப்பான்மையை ஏற்படுத்தக்கூடிய விதமா க இல்லை. ஆனால், அவரால் இராணுவங்களையும் எதிர்த்து நிற்கக்கூடிய வீர உணர்ச்சியை இலட்சக்கணக்கானவர்களிடத்தில் உண்டாக்க முடிந்தது”. இவ்வாறு, தம்முடைய மேடைப்பே ச்சின் மூலம் மக்கள ப் பெரிதும் ஈர்த்தவர் பேரறிஞர் அண்ணா. தமிழனுக்கு நாடக அரங்குகளும் திரைப்படக் கொட்டகைகளும் பொழுதுபோக்குகளாக இருந்த காலகட்டத்தில் புத்தொளி வெளிச்சமா க அண்ணாவின் மேடைப்பே ச்சு மலரத்தொடங்கியது.
📖 Samacheer Kalvi · 11th TN - English Medium · Advanced Tamil · Page 136poem
ஆற்றிய உரை
Chapter 2: அரங்கவியல் · Advanced Tamil
Related topics
Have a question about this topic?
Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.
Ask AI about this topic →