📖 Samacheer Kalvi · 11th TN - English Medium · Advanced Tamil · Page 193poem

பக்க அமைப்புமுறை

Chapter 2: அரங்கவியல் · Advanced Tamil

பக்க அமைப்புமுறை செய்தித்தாளில் இடம்பெற வேண்டிய செய்திகள், எந்தெந்தப் பக்கத்தில் எந்தெந்த இடத்தில் எப்படி அமைய வேண்டுமெனத் தீர்மானிப்பது, பக்க வடிவமைப்பு. செய்தித்தாளின் அனைத்துப் பக்கங்களும் மிகவும் இன்றியமையாதவையாக இருப்பினும், முதற்பக்கம் சிறப்பானதாகவும் பொலிவுடையதாகவும் அமைந்திருக்கும். முதற்பக்கத்தில் முதன்மையான அரசியல் செய்திகள், உள்ளத்தை உருக வைக்கும் நிகழ்வுகள், வண்ணப்படங்கள் போன்றவை இடம்பெற்றுப் படிக்கும் ஆவலைத் தூண்டும் விதமா க அமைந்திருக்கும். செய்தித்தாளை அச்சிடுவதற்கு முன்புவரை கிடைக்கக்கூடிய (கடைசி நேரச் செய்திகள்) இன்றியமையாத செய்திகள், முதற்பக்கத்தில் வடிவமைக்கப்பட்டிருக்கும். மற்ற பக்கங்கள் முன்பே முழுமையாக முடிக்கப்பட்டிருக்கும். செய்திகளை வழங்குவதன் அடிப்படையில் செய்தித்தாள் மூவகைப் பக்க அமைப்பைக் கொண்டுள்ளது. .

Related topics

Have a question about this topic?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →