பம்மல் சம்பந்தனார் ( - ) ’ தமிழ்நாடகத் தந்தை’ என்றழைக்கப் பட்ட பம்மல் சம்பந்தனார் நாடக அமைப்பிலும் நடிப்பு முறையிலும் மா ற்றங்களை ஏற்படுத்தியதன் மூலம் தமிழ் நாடகத்தை மேனாட்டு நாடகங்களுக்கு நிகராக மாற்றியவர். புராண, வரலாற்று நாடகங்களுடன் மக்க ளின் வாழ்க்கையை ஒட்டிய கதைகளைக் கொண்ட, இயல்பான பேச்சு மொழியில் அமைந்த சமூக நாடகங்களையும் இவர் நடத்தினார். பாடல்கள் மிகுந்திருந்த தமிழ் நாடகங்களில் உரையாடல்கள முதன்மைப் படுத்தினார். அரிச்சந்திரன் கதையை சந்திரஹரி என்று பொய் மட்டுமே பேசுகிற ஒருவனைப் பற்றிய கதையாக மாற்றியதன் மூலம் ’எதிர்க்கதை நாடகம்’ என்னும் புதிய வகையையும் இவர் உருவாக்கினார். மொழிபெயர்ப்பு நாடகங்களையும் இவர் படைத்துள்ளார். இரவு முழுவதும் நடைபெற்ற நாடகங்களை மூன்று மணி அல்லது நான்கு மணி நேரத்திற்குள் முடிக்கும் முறையை க் கொண்டுவந்தார். 1891இல் இவரால் ஏற்படுத்தப்பட்ட சுகுண விலாச சபை , தமிழ்நாட்டில் நிறுவப்பட்ட முதல் பயில்முறை நாடகக் குழுவாகும். இவர் எழுதிய நாடகங்களும் அச்சு நூல்களாக வெளிவந்துள்ளன. அவற்றுள் மனோகரா, சபாபதி, சந்திரஹரி, சிறுத்தொண்டர் நாடகம், உத்தமபத்தினி போன்றவை குறிப்பிடத்தக்கன. நாடகத்தமிழ், நாடகமேடை நினைவுகள், பேசும்பட அனுபவங்கள் ஆகியன இவர் நாடகம் தொடர்பாக எழுதிய நூல்களாகும். 'இந்திய நாடக மேடை' என்ற இதழையும் இவர் வெளியிட்டார். 11th Advance Tamil - - - :
📖 Samacheer Kalvi · 11th TN - English Medium · Advanced Tamil · Page 121poem
பம்மல் சம்பந்தனார் (1873 - 1964)
Chapter 2: அரங்கவியல் · Advanced Tamil
Related topics
Have a question about this topic?
Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.
Ask AI about this topic →