📖 Samacheer Kalvi · 11th TN - English Medium · Advanced Tamil · Page 174grammar_exercise

தெரியுமா?

Chapter 2: அரங்கவியல் · Advanced Tamil

தெரியுமா? ஆசிரியர்: பிரசங்கம், பிரச்சாரம் ஆகிய வடம ழிச் சொல்லுக்குச் சரியான தமிழ்ச் சொல் சொல்லுங்கள். நே. கா.

நி : அம்மா, மாணாக்கர் விடை தேடுவார்கள். நாம் தொடர்ந்துபேசலாம். மொழிபெயர்ப்பு எப்படி இருக்க வேண்டுமென நினைக்கிறீர்கள்? ஆசிரியர்: மொழிபெயர்ப்பில் பொருள் பொருத்தப்பாடுதான் முதன்மையானது.

அதனால், மூலமொழியின் செய்தியைப் புரிந்துகொண்டுதான் மொழிபெயர்க்க வேண்டும். நே. கா. நி : ஓர் எடுத்துக்காட்டு சொல்லுங்களேன்.

ஆசிரியர்: சில இடங்களில் அழகுக்காகப் புற்றரை (புல் தரை) வளர்த்திருப்பார்கள். அங்கு, ஓர் அறிவிப்புப் பலகையும் வைத்திருப்பார்கள். அதில், ‘Keep off the Grass’ என ஆங்கிலத்திலும், ‘புல்தரைமேல் நடக்காதீர்கள்‘ எனத் தமிழிலும் எழுதப்பட்டு இருக்கும். நே.

கா. நி : ஆமா ம். நான்கூடப் பார்த்திருக்கிறேன். ஆசிரியர்: புல்தரைமேல் நடக்காதீர்கள் என்றால், புல்தரைக்கு உள்ளே நடக்க வேண்டுமெனப் பொருளாகிவிடும், அல்லவா?

புல்தரையில் நடக்காதீர்கள் என்பதுதான் சரியான மொழிபெயர்ப்பு. நே. கா. நி : புரிகிறது, அம்மா.

இதோ, மீண்டும் மாணாக்கர் ஒருவர் நம்முடன் தொடர்புகொள்ள வருகிறார். மாணாக்கர்: வணக்கம், அம்மா. என் பெயர் அமுதன். வடச ற்களுக்குரிய தமிழ்ச்சொற்கள் கேட்டீர்களே, பிரசங்கம் என்பது, சொற்பொழிவு; பிரச்சாரம் என்பது, பரப்புரை.

நான் சொன்னது சரியா? ஆசிரியர்: சரியாகச் சொன்னீர்கள் தம்பி. சரியான புரிதலோட மொழி பெயர்த்திருக்கிறீர்கள். மேலும், இவைபோன்ற வடசொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள் அறிய, பேராசிரியர் நீலாம்பிகை அம்மையாரின் ‘வடசொல் தமிழ் அகரவரிசைச் சுருக்கம்’, என்னும் நூல் உங்களுக்கு மிகவும் பயன்படும்.

நே. கா. நி: மாணாக்கர்களே, நூற்பெயரைக் குறித்துக் கொள்ளுங்கள். அம்மா !

சொல்லுக்குச் சொல் மொழிபெயர்க்கக் கூடாது என்று சொல்கிறார்களே, ஏன்? ஆசிரியர்: நல்ல வினா கேட்டீர்கள். எடுத்துக்காட்டுடன் சொன்னால் எளிதாகப் புரியும். ‘Fish Seed’ என்னும் ஆங்கிலச் சொற்றொடரைத் தமிழில் சொல்லுக்குச் சொல் மொழிபெயர்த்தால் என்ன ஆகும் என்று பார்ப்போமா?

Fish என்றால் மீன். Seed என்றால் விதை. அதனை மீன் விதை என்று சொல்லலாமா? நே.

கா. நி: நீங்களே சொல்லுங்களேன். ஆசிரியர்: மீன் விதையை வாங்கிக் குழிபறித்து நட்டால் மீன் மரமா முளைக்கும்? சொல்லுக்குச் சொல் மொழிபெயர்த்தால் எவ்வளவு இடர்ப்பாடு ஏற்படுகிறது எனப் பார்த்தீர்களா?

அதனால், மொழிக்கான மரபைத் தெரிந்துகொண்டு, மொழிபெயர்க்க வேண்டியது இன்றியமையாதது. அந்த ஆங்கிலச் சொற்றொடரைத் தமிழில் ‘மீன்குஞ்சு‘ என்று மொழிபெயர்ப்பில் மரபின் இன்றியமையாமை செந்தமிழ் மொழியில் பெருமதிப்புக் கொண்டு, அதனை ஐயந்திரிபறக் கற்று, இலக்கண இலக்கிய நூல்களை ஆக்கியவர் இத்தாலி நாட்டைச் சேர்ந்த வீரமாமுனிவர் ஆவார். அவர் தமிழைக் கற்கத்தொடங்கிய காலத்தில், அதன் மரபு தெரியாது “கோழி தன் குட்டிகளைக் காப்பதுபோல்“ என்று தம் சொற்பொழிவில் கூற, கோவில் வழிபாட்டிற்காகக் கூடியிருந்த அத்தனை பேரும் சிரித்தனர். வீரமாமுனிவர், சிரிப்பின் காரணத்தைக் கேட்டறிந்தார்.

தாம் செய்த பிழையை உணர்ந்தார்; தமிழை நன்கு கற்றார்; தமிழில் புலமை பெற்றார்; தமிழ் மரபைப் போற்றினார். ( ‘கோழி தன் குஞ்சுகளைக் காப்பதுபோல்‘ என்பதே மரபு. ) 11th Advance Tamil - - - :

Related topics

Have a question about this topic?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →