📖 Samacheer Kalvi · 11th TN - English Medium · Advanced Tamil · Page 129poem

பேச்சுக்கலையின் ஆற்றல்

Chapter 2: அரங்கவியல் · Advanced Tamil

பேச்சுக்கலையின் ஆற்றல் பேச்சு, தனிமனிதனுக்குப் பயன்படுகிறது. பேச்சுக்கலை, தனிமனிதனுக்கும் சமூகத்திற்கும் பயன்படுகிறது. அது, மக்களின் வாழ்க்கை முறைகளையும் நாகரிகத்தையும் பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் பேணிப்பாதுகாக்கிறது. ஒழுங்குபடுத்தப்பட்ட சமுதாயத்தை வடிவமைக்க உதவுவது பேச்சுக்கலை ஆகும். உலகின் மிகச்சிறந்த தலைவர்கள் தங்கள் பேச்சாற்றலால் சமூகத்தில், அரசியலில் மிகப்பெரிய மாற்றங்களைச் செய்திருக்கிறார்கள். மன்னர் ஆட்சியை, ஏகாதிபத்திய ஆட்சியை, அந்நியர் ஆட்சியை, கொடுங்கோல் ஆட்சியை, முடியாட்சியை வீழ்த்தி மக்களாட்சியை மலரச்செய்த ஆற்றல் உடைய கலை “பேச்சுக்கலை” ஆகும். மக்களாட்சி, தேசியம், பொதுவுடைமை , சமத்துவம், சகோதரத்துவம், சுதந்திரம், விழிப்புணர்வு முதலான பண்புகள் ஒரு நாட்டில் வளர்வதற்குத் துணையாக இருப்பது மனிதனின் தனித்திறமை வாய்ந்த பேச்சுக்கலையாகும். அமெரிக்கக் குடியரசுத் தலைவராக இருந்த உட்ரோ வில்சனிடம் நண்பர் ஒருவர், “ நீங்கள் கால்மணி நேரம் சொற்பொழிவாற்ற எத்தனை நாள்கள் தயார் செய்வீர்கள்?“ என்று கேட்டார். அதற்கு அவர், “இரண்டு வாரம்“ என்றாராம். பிறகு, “ஒரு மணி நேரம் பேச ஒரு வாரம்“ என்றாராம். பிறகு, “இரண்டு மணி நேரம் பேச வேண்டும் என்றால், எத்தனை நாள் தயார் செய்வீர்கள்?“ என்று கேட்டதற்கு “இப்போதே பேசுகிறேன்“ என்றாராம்.

Related topics

Have a question about this topic?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →