📖 Samacheer Kalvi · 11th TN - English Medium · Advanced Tamil · Page 117grammar_exercise

தெருக்கூத்து – ஓர் அறிமுகம்

Chapter 2: அரங்கவியல் · Advanced Tamil

தெருக்கூத்து – ஓர் அறிமுகம் தமிழகத்தின் தொன்மையான கலைவடிவங்களுள் ஒன்று, கூத்துக்கலை. தெருவில் நடத்தப்படும் கூத்து என்பதால், இது தெருக்கூத்து என அழைக்கப்படுகிறது. பார்வையாளர்களுக்குக் கதை சொல்லல், நடித்தல், ஆடல், பாடல் எனப் பல கலைத்தன்மைகள் சேர்ந்த ஒன்றே கூத்துக்கலை. தெருக்கூத்தின் வேர், தமிழ்ப் பண்பாட்டிலும் ஊடுருவியுள்ளதைக் காணலாம்.

இது பெரும்பாலும். திருவிழாக்களிலும், சடங்குசார்ந்த நிகழ்வுகளிலும், வழிபாடுகளிலும் நிகழ்த்தப்படுகிறது. மிகுந்த துடிப்போடு விளங்கும் இந்தக் கலையில், நடிப்புடன் கூடிய வசனம், ஆடல், பாடல் என அனைத்தும் உள்ளன. இக்கலை, இரவு ஒன்பது மணிக்குத்தொடங்கி, விடியற்காலை வரை தொடர்ந்து நடைபெறுவதும் உண்டு.

தெருக்கூத்துக் கலையானது நாட்டார் கதை, சீர்திருத்தக்கதை, விழிப்புணர்வுக்கதை, மகாபாரதம், இராமா யணக் கதைகள், புராணக்கதைகள், கதைப்பாடல்கள் ஆகியவற்றின் உள்ளடக்கத்தைக் கொண்டு நிகழ்த்தப்படுகிறது. கூத்து தொடங்கும்முன் அரைமணி நேரத்திற்கு மிருதங்கம், ஜால்ரா உள்ளிட்ட இசைக்கருவிகள் அனைத்தும் ஒரு சேர ஒலிக்கும். இவ் வொலி, ஊராரை

Related topics

Have a question about this topic?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →