தொல்காப்பியம் தொல்காப்பியம், ஐந்திலக்கணம் கொண்டு விளங்குகிறது. எழுத்து, சொல், பொருள் ஆகிய அதிகாரங்கள் உள்ளன. ஒவ்வோர் அதிகாரமும் ஒன்பது இயலாகப் பகுக்கப்பட்டுள்ளது. இந்நூல், எழுத்துகளாலும் சொற்களாலும் உருவாக்கப்படும் செய்யுளுக்கும் அதில் இடம்பெ றும் பொருளுக்கும் இலக்கண வரையறைகளைத் தந்துள்ளது.
தொல்காப்பியப் பொருளதிகாரம், பழந்தமிழரின் நாகரிகத்தையும் அவர்தம் வாழ்வியல் நடைமுறைகளையும் எடுத்தியம்புகிறது. இவ்வதிகாரத்தில் அமைந்துள்ள இயல்களிலிருந்து இயற்கை, சுற்றுப்புறச்சூழல், அக்கால மக்க ளின் அகவுணர்வுகள், பண்பாட்டுப் பழக்கவழக்கங்கள் ஆகியவற்றை அறிந்து கொள்ளமுடிகிறது. போர் நெறிகள் குறித்த செய்திகளைப் புறப்ப ருள் பற்றிய இயலிலும் அன்பின் ஐந்திணை அவற்றின் முதல், கரு, உரிப்பொருள் ஆகியவற்றை அகப்பொருள் பற்றிய இயல்களிலும் அறியமுடிகிறது. இந்நூலுக்கு இளம்பூரணர், சேனாவரையர், நச்சினார்க்கினியர், பேராசிரியர் முதலானோர் உரை எழுதியுள்ளனர்.