📖 Samacheer Kalvi · 11th TN - English Medium · Advanced Tamil · Page 212grammar_exercise

எழுத்துச் சீர்திருத்தம்

Chapter 2: அரங்கவியல் · Advanced Tamil

எழுத்துச் சீர்திருத்தம் பெரியாரின் வாழ்க்கை, சமுதாயச் சீர்திருத்தத்திற்கான வரலாறாகும். சமயமற்ற, சாதிபேதமற்ற ஒரு சமத்துவச் சமுதாயமாக நாடு திகழவேண்டும் என்பதே பெரியாரின் குறிக்கோளாக இருந்தது. அவரது குறிக்கோள்களை நிறைவே ற்ற, ஆட்சியில் பங்கேற்காமல் ஆட்சியாளர்களை இயக்கிய ஆளுமையாகத் திகழ்ந்தார். அவரின் கொள்கைகளை மக்க ளிடையே கொண்டுசேர்க்கப் பயன்பட்ட கருவிகள் இரண்டு; ஒன்று மேடைப்பே ச்சு; மற்றொன்று எழுத்து.

மேடைப்பே ச்சு, அவரது நேரிடையான களப்பணிக்கு உதவியது. எழுத்து, அவரது கொள்கைகளை மிகப்பெரிய வீச்சில் மக்க ளிடையே கொண்டு சென்றது. தமது எழுத்துகளை வெளியிடத் தாமே இதழ்களைப் பொறுப்பேற்று நடத்தியதன்மூலம், அவர் ஒரு புரட்சிகரமா ன இதழாளராகவும் அறியப்படுகிறார். தமிழகத்தில் இதழ்களின் தாக்கத்தால் மக்கள யும், தலைவர்களையும் ஒருங்கிணைத்ததில் பெரியாருடைய இதழ்ப்பணி முதன்மையானது.

எதனையும் ஏன்? எதற்கு? எப்படி? என்று ஆய்வுக்கு உட்படுத்தும் பகுத்தறிவை மக்களிடம் வளர்ப்பதையே ஒர் இதழாளராக, பெரியார் தமது நோக்கமாகக் கொண்டிருந்தார்.

Related topics

Have a question about this topic?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →