கட்டியக்காரனின் உடை கட்டியக்காரனுடைய உடை, முழுக்கால் சட்டையும் பல வண்ணங்கள் கொண்ட மேல் சட்டையும் கோமாளித் தொப்பியும் ஆகும். மற்றவர் கதைக்கு ஏற்பவும், பாத்திரத்தின் தன்மைக்கேற்பவும், உடலோ டு ஒட்டிய முழுக்கால் சட்டை, அதன்மேல் குட்டைப் பாவாடை போன்ற உடையும் அணிவான். பாத்திரத்திற்கேற்ற மேல் உடையும் கட்டைகளால் ஆன மகுடம், மார்புப் பதக்கம், தோளணிகள் (புஜகீர்த்திகள்) போன்ற அணிகளையும் அணிவான். வண்ணக் காகிதங்கள், பாசிமணிகள், கண்ணாடித் துண்டுகள் போன்றவற்றால் அணிகலன்கள் அழகுபடுத்தப்பட்டிருக்கும். பெண் வேடம் புனையும்போது, சேலையும் இரவிக்கையும் அணிந்து குறைவான அணிகலன்களையும் அணிவான்.
📖 Samacheer Kalvi · 11th TN - English Medium · Advanced Tamil · Page 118poem
கட்டியக்காரனின் உடை
Chapter 2: அரங்கவியல் · Advanced Tamil
Related topics
Have a question about this topic?
Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.
Ask AI about this topic →