📖 Samacheer Kalvi · 11th TN - English Medium · Advanced Tamil · Page 118grammar_exercise

பெயர்கள்

Chapter 2: அரங்கவியல் · Advanced Tamil

பெயர்கள் கட்டியக்காரன் கோமாளி, காவற்காரன், பஃபூன், சபையலங்காரன், விதூஷகன் போன்ற பல பெயர்களில் அழைக்கப்படுகிறான். கட்டியம் என்றால், அரசன் முன் புகழ்ம ழி கூறுதல் என்று பொருள். தெருக்கூத்துக் கதைமாந்தர்களின் அருமை பெருமைகளைச் சொல்லிப் பார்வையாளர்களுக்கு அவர்களை அறிமுகப் படுத்துவதாலும் கட்டியக்காரன் எனப் பெயர்பெற்றுள்ளான். கூத்தில் மிகச் சுதந்தரமாக இயங்கும் கதைமாந்தன், கட்டியக்காரன் மட்டுமே.

பார்வையாளர்கள், இரவு முழுவதும் உறங்காமல் விழித்திருப்பதற்காகக் கலகலப்பை ஏற்படுத்தியும் அவ்வப்போது நிகழ்கால நடப்புகளைச் சொல்லியும் கூத்தைக் கொண்டுசெல்வான். கட்டியக்காரன், கூத்து நடைபெ றும் கால அளவுக்கேற்பக் கூத்தை நீட்டுவதற்கோ சுருக்குவதற்கோ ஏற்றார்போல், கதைமா ந்தர்களை எல்லைக்குள் கொண்டுவந்து நிறுத்த வேண்டும். ஒப்பனை முடிந்து கதைமாந்தர் மேடைக்கு வரும்வரை பார்வையாளர்களோடு நாட்டு நடப்பையும் நகைச்சுவையையும் பகிரவேண்டும். இத்தனையும் நிறைவேற்றும் கட்டியக்காரன், கூத்தின் அனைத்துக் கூறுகளையும் தெரிந்தவனாக இருக்கவேண்டும்.

கூத்துக்கலையில் தேர்ந்த கட்டியக்காரன், பார்வையாளர்களின் குரலாக, மக்க ளின் குரலாக இறுதிவரை இயங்குகிறான். 11th Advance Tamil - - - :

Related topics

Have a question about this topic?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →