கலவைத்தொடர் தமிழில் பிழையின்றி எழுத வேண்டுமெனில், நல்ல தமிழ்நூல்களைப் படிக்க வேண்டும் என்னும் தொடரில், நல்ல தமிழ்நூல்களைப் படிக்க வேண்டும் என்பது, முதன்மைத் தொடர். தமிழில் பிழையின்றி எழுத வேண்டுமெனில் என்பது, சார்புத் தொடர். இவ்வாறு, பல தொடர்கள் கலந்து ஒரே தொடராக வருவது கலவைத் தொடராகும். ஒரு தொடரை மற்றொரு தொடராக மாற்றுதல் ஒரு தொடரை மற்றொரு தொடராக மாற்றும் பயிற்சியைக் கீழ்வகுப்புகளிலேயே மேற்கொண்டுள்ளோம்.
அவ்வாறு மாற்றம் பெறும் தொடர்களை வினை மாற்றம், கூற்று மாற்றம், ஒரு தொடரைப் பல்வகையாக மாற்றுதல் எனப் பகுத்துக் காணலாம்.