வினை மாற்றம் ஒரு தொடரை மற்றொரு தொடராக மாற்றும்போது, பெயர்ச்சொற்கள் மாற்றம் அடைவதில்லை. வினைச்சொற்களே மாற்றம் அடைகின்றன. • செய்வினை - செயப்பாட்டு வினை பூங்குழலி யாழ் மீட்டினாள் செய்வினைத்தொடர் யாழ் பூங்குழலியால் மீட்டப்பட்டது - செயப்பாட்டு வினைத் தொடர் தன்வினை - பிறவினை தமிழழகன் கல்வி கற்றான் - தன்வினை தமிழழகன் கல்வி கற்பித்தான் - பிறவினை உடன்பாட்டு வினை- எதிர்மறை வினை கலைச்செல்வி நேற்று வந்தாள் - உடன்பாட்டு வினை கலைச்செல்வி நேற்று வந்திலள் - எதிர்மறை வினை இன்றைய வழக்கில், இறந்த காலத்திலும் நிகழ்காலத்திலும் தொடர்களில் எதிர்மறைப் பொருளை உணர்த்த இல்லை என்னும் சொல் பயன்படுகிறது. எதிர்காலத்தில் எதிர்மறைப்ப ருளை உணர்த்த ஆ என்னும் எதிர்மறை இடைநிலையுடன் சேர்ந்த மாட்டா (மாட்டு + ஆ) மாட்டாள் என்னும் சொல் வருகிறது.
இளமுருகன் நேற்று வரவில்லை (இறந்தகாலம்) விண்ணரசி இன்று வரவில்லை (நிகழ்காலம்) இனியன் நாளை வரமாட்டான் (எதிர்காலம்) அல்ல என்னும் சொல்லும் ஐம்பால்மூவிடத்துக்கும் முக்காலத்திலும் எதிர்மறைப் பொருளில் வருகிறது. நான் அல்ல, நீ அல்ல, நாங்கள் அல்ல, நீங்கள் அல்ல. அவன் அல்ல, அவள் அல்ல, அவர் அல்ல, அது அல்ல, அவை அல்ல. (நான் அல்லேன்; நீ அல்லை; நாங்கள் அல்லேம் என்பன இலக்கண வழக்கு.)