📖 Samacheer Kalvi · 11th TN - English Medium · Advanced Tamil · Page 156grammar_exercise

இடைச்செருகலும் விரித்தலும்

Chapter 2: அரங்கவியல் · Advanced Tamil

இடைச்செருகலும் விரித்தலும் ஒரு தொடரில் பெயரெச்ச, வினையெச்சங்கள், தாம் முடிக்கும் சொல்லுக்குமுன் இடையில் வேறு சொற்களும் வரலாம். இவ்வாறு வரும் சொல்லை இடைநிலை எனத் தொல்காப்பியர் குறித்துள்ளார். மொழியியலார், இடைச்செ ருகல் எனக் குறிப்பிடுகின்றனர். .

பெயரெச்சத் தொடரில் இடைநிலையாக (செருகலாக) வரும் ச@ொல் ஆடிய மயில் - ஆடிய அழகான மயில் (அழகான என்பது இடைச்செருகல்) கிடைத்த நூல் - கிடைத்த அரிய நூல் (அரிய என்பது இடைச்செருகல்) . வினையெச்ச த் தொடரில் இடைநிலையாக (செருகலாக) வரும் ச@ொல் படித்துக் கூறினான். - படித்துப் பொருள் கூறினான். (பொருள் என்பது இடைச்செருகல்) உழுது வந்தான்.

- உழுது ஏரோடு வந்தான். (ஏரோடு என்பது இடைச்செருகல்) இக்கருத்தைப் பின்வரும் நூற்பா குறிப்பிடுகிறது. ‘தத்தம் எச்சமொடு சிவணும் குறிப்பின் எச்சொல் ஆயினும் இடைநிலை வரையார்‘ (தொல். சொல்.வினை.

) (சிவணும் – பொருந்தும், வரையார் - நீக்கார்.) ‘அறத்தை அரசன் விரும்பினான்‘ எனவும் ‘உண்டது பசித்த யானை‘ எனவும் வரும் தொடர்களில், முறையே வேற்றுமையுருபும் முற்றுவினையும் அமைந்துள்ளன. அரசன், பசித்த என்னும் பிற சொற்கள் அவற்றோடு பொருந்தி வந்துள்ளன. இவ்வாறு பிற சொற்கள் நிற்றலை ‘இடைப்பிறவரல்‘ என்பர். இதனை, ‘உருபு முற்று ஈரெச்சம் கொள்ளும் பெயர்வினை இடைப்பிற வரலுமாம் ஏற்பன‘ என நன்னூல் குறிப்பிடுகிறது.

இடைச்செ ருகலாக வந்த சொற்கள், பின்னாளில் பெயரடை, வினையடைகளாகத் தொடர்களில் அமைந்தன. சிலபோது, அடைகளாகப் பொருந்திவரும் சில தொடர்களில், பொருள் மயக்கம் ஏற்படவும் வாய்ப்புள்ளது. எடுத்துக்காட்டாகப் புதிய மாணாக்கர் விடுதி என்னும் தொடரில், மாணாக்கர் என்னும் சொல் இடைச்செருகலாக வரும்போது, மாணாக்கர் புதியவரா, விடுதி புதியதா என்பதில் பொருள் மயக்கம் ஏற்படுகிறது. புதிய மாணாக்கர் எனப் பொருள் கொள்ளும்போது, மாணாக்கர்தாம் புதியவர்.

புதிய என்னும் அடைம ழி, மாணாக்கருக்குத் தாம் பொருந்தியுள்ளது. புதிய விடுதி எனப் பொருள் கொள்ளும்போது, விடுதிதான் புதியது. சொற்கள் தொடர்ந்துநின்று, பொருள் தருவது தொடர். இருசொல்லுக்கு இடையே ஏதேனும் ஓர் உருபு மறைந்து வருவது, தொகைநிலைத் தொடர்.

வேற்றுமை, வினை, பண்பு, உவமை, உம்மை, அன்மொழி என அறுவகைத் தொகைகள் உள்ளன . (தொகை – தொக்கி வருதல்/ மறைந்து வருதல்) தொகைநிலைக்கு எதிர்மறை தொகாநிலை. இரு சொல்லுக்கிடையே உருபு/ சொல் மறையாது வருவது. தொகாநிலைத் தொடர்கள் ஒன்பது உள்ளன .

அவை: எழுவாய்த்தொடர், வினைமுற்றுத்தொடர், பெயரெச்சத் தொடர், வினையெச்சத் தொடர், விளித்தொடர், வேற்றுமைத் தொகாநிலைத் தொடர், இடைச்சொல் தொடர், உரிச்சொல் தொடர், அடுக்குத் தொடர் என்பன.

Related topics

Have a question about this topic?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →