📖 Samacheer Kalvi · 11th TN - English Medium · Advanced Tamil · Page 144grammar_exercise

இலக்கணத்தின் இன்றியமையாமை

Chapter 2: அரங்கவியல் · Advanced Tamil

இலக்கணத்தின் இன்றியமையாமை ஒரு மொழிக்கு ஒழுங்கையும் சீர்மையையும் தருவது இலக்கணம். அஃது, ஒரு மொழியின் பல்வேறு கூறுகளை எடுத்துரைக்கிறது; மொழியின் இயக்கத்தைப் பல விதிகளாகப் பாகுபடுத்திக்காட்டுகிறது. இலக்கணம், பழங்காலந்தொட்டே நம் தமிழ்ம ழியின் அமைப்பையும் இலக்கிய மரபையும் போற்றிப் பாதுகாத்து வந்துள்ளது. அதுமட்டுமின்றி, காலந்தோறும் மொழியில் ஏற்படும் மா ற்றங்களை உள்வாங்கவும் அவற்றை எதிர்கொள்ளவும் செய்வதில் இலக்கணத்தின் பங்கு இன்றியமையாததாக உள்ளது.

நாம், தமிழில் திருத்தமாகப் பேசுவதற்கும் படிப்பதற்கும் பிழையின்றி எழுதுவதற்கும் அதன் இலக்கணத்தை நன்கு கற்றுக்கொள்ளல் வேண்டும். ஆழ்ந்த இலக்கண அறிவு பெற்றிருந்தால்தான், இலக்கியத்தின் பல நுட்பமான கருத்துகளைக் கூர்ந்து, உணர்ந்து சுவைக்க முடியும். ஆகவே, இலக்கணம் என்பது, ஒரு மொழியின் கண்ணாகும்.

Related topics

Have a question about this topic?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →