📖 Samacheer Kalvi · 11th TN - English Medium · Advanced Tamil · Page 120poem

சங்கரதாச சுவாமிகள் (1867 - 1922)

Chapter 2: அரங்கவியல் · Advanced Tamil

சங்கரதாச சுவாமிகள் ( - ) தமிழ்நாடக மரபைப் பின் பற்றியும் கால மாற்றங்களுக்கேற்ப நாடகம் படைத்தவர் ச ங க ர த ச சுவாமிகள். இசையை முதன்மைப்படுத்திக் கூத்து மரபுகளை உ ள வ ங் கி நாடகங்களைப் படைத்தார். பழங்கதைகளில் குறைவான நிகழ்ச்சிகளை எடுத்துக் கொண்டு பாத்திரங்களின் தர்க்கத்திற்கு இடம ளித்து நாடகங்களை உருவாக்கினார். சிறுவர்களைக் கொண்ட ‘பாய்ஸ் கம்பெனி’ என்ற பாலர் நாடகக்குழுவை இவர் உருவாக்கியது குறிப்பிடத்தக்கது. இதைத் தொடர்ந்து பல குழுக்கள் உருவாயின. இவரைத் தமிழ் நாடகத் தலைமையாசிரியர் என அழைப்பர். ஆட்டம், இசை, சிறிதளவு வசனம் என்று இருந்த தெருக்கூத்து நாடகங்களின் அமைப்பைக் குறைத்து, கற்பனைச் சிறப்பும் சந்தநயம் மிக்கதுமான பாடல்கள இவர் படைத்தார். நடிகர்கள் விருப்பம்போ ல் வசனங்களைப் பேசிவந்த நிலையை மாற்றி வரையறுத்த நாடகப் பிரதிகளை உருவாக்கினார். பழந்தமிழ் இலக்கிய வரிகளையும் உரையாடலில் பயன்படுத்தினார். இவரது நாடகங்களிலும் பாடல்களின் ஆதிக்கம் இருந்தது. இவர் பல புராண நாடகங்களையும், வரலாற்று நாடகங்களையும் எழுதியிருக்கிறார். இசையை, கருநாடக இசைக் கூறுகளை முதன்மைப்படுத்தி நாடகங்கள் நிகழ்ந்தன. இவர்காலத்தில் படிப்படியாக நகரங்களை நோக்கி நாடகங்கள் நகர்ந்தன.

Related topics

Have a question about this topic?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →