📖 Samacheer Kalvi · 11th TN - English Medium · Advanced Tamil · Page 133question

சொற்பொழிவு

Chapter 2: அரங்கவியல் · Advanced Tamil

சொற்பொழிவு விவேகானந்தர் அமெரிக்காவின் சிகாகோ நகரில் செப்டம்பர் , அன்று நடைபெற்ற உலகச் சமய மாநாட்டுக் கூட்டத்தில் ஆற்றிய சொற்பொழிவிலிருந்து சில பகுதிகள்… அமெரிக்கச் சகோதர சகோதரிகளே! இ ன ப மு ம் இதமும் கனிந்த உங்கள் வரவேற்புக்கு மறுமொழி கூற, இப்போ து உங்கள் முன் நிற்கிறேன். என் இதயத்தில் மகிழ்ச்சி பொங்குகிறது. அதனை வெளியிட வார்த்தைகள் இல்லை.

உலகத்தின் மிகப் பழமைவாய்ந்த துறவியர் பரம்பரையின் பெயரால் உங்களுக்கு நன்றி கூறுகிறேன். அனைத்துச் சமயங்களின் அன்னையின் பெயரால் நன்றி கூறுகிறேன். பல்வேறு இனங்களையும் பிரிவுகளையும் சார்ந்த கோடிக்கணக்கானவர்களின் பெயரால் நன்றி கூறுகிறேன். இந்த மேடையில் அமர்ந்துள்ள பேச்சாளர்களுள் சிலர் கீழ்த்திசை நாடுகளிலிருந்து வந்துள்ள பிரதிநிதிகளைப் பற்றிக் குறிப்பிடும்போது, ’வேற்றுச் சமய நெறிகளை வெறுக்காத பண்பினைப் பல நாடுகளுக்கு எடுத்துச் சென்ற பெருமை இவர்களைத்தான் சாரும் என்று உங்களுக்குக் கூறினார்கள்’.

அவர்களுக்கும் என் நன்றி. பிற சமயக்கொள்கைகளை வெறுக்காமல் மதித்தல், அவற்றை எதிர்ப்பின்றி ஏற்றுக் கொள்ளுதல் ஆகிய இரு பண்புகளை உலகத்திற்குப் புகட்டிய சமயத்தைச் சார்ந்தவன் நான், என்பதில் பெருமையடைகிறேன். எதையும் வெறுக்காமல் மதிக்கவேண்டும் என்னும் கொள்கைகளை நாங்கள் நம்புவதோடு, எல்லாச் சமயங்களும் உண்மை என்று ஒப்புக் கொள்ளவும் செய்கிறோம். என் அருமைச் சகோதரர்களே!

பிள்ளைப் பருவத்திலிருந்தே நான் பாடிப் பயின்று வருவதும் கோடிக்கணக்கான மக்கள் இன்றளவும் நாள்தோறும் தொடர்ந்து பாடி வருவதுமான பாடலின் ஒருசில வரிகளை இங்கு உங்கள்முன் குறிப்பிட விரும்புகிறேன். எங்கெங்கோ தோன்றுகின்ற ஓடையெல்லாம் இறுதியிலே கடலில் சென்று சங்கமாம் பான்மையினைப் போன்றுலகோர் பின்பற்றும் தன்மை யாலே

Related topics

Have a question about this topic?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →