(ஒற்றை நடிகர் நாடகம்) மேடையில் சவுக்குக் கழிகள் ஆங்காங்கே நடப்பட்டுள்ளன. அந்தக் கழிகளின் தலைப்பில் போதுமான நீளஅகலமுள்ள அட்டைகள் அறையப்பட்டுள்ளன. அட்டையில் எழுத்துகள் புளோரஸண்ட் மையால் எழுதப்பட்டுள்ளன. இந்தக் கழிகள் எல்லாவற்றையும் ஒரு நீள வடக்க யிறு இணைத்துக் கொண்டு சென்றிருக்கிறது.
இந்தக் கயிற்றைப் பிடித்துக் கொண்டுதான் நடிகன் ‘பேருந்து நிலையத்திலிருந்து’ ‘வீடு’ வரை பயணிக்கிறான். கயிறு, தரையிலிருந்து சுமார் நான்கடி உயரத்தில் இருக்கிறது. மேடையில் மெல்ல ஒளி வளரும்போதே , ஒரு ‘ கனமா ன’ ஸ்பாட்லைட், கழிகளில் அறையப்பட்டுள்ள அட்டைகளின் மேல் விழுந்து, நகருகிறது. அது எல்லா அட்டைகளையும் காட்டி முடிக்கவும், மேடையில் ஒளி போதுமான அளவு வளர்ந்து நிற்கவும் சரியாக இருக்கிறது.
கழிகள் ‘பேருந்து நிலையம்’ மற்றும் ‘வீடு’ இரண்டின் முன் மட்டும் நாற்காலிகள் உள்ளன. பேருந்து நிலையம் முன்பு உள்ள நாற்காலியில் நடிகன் உட்கார்ந்திருக்கிறான். அவன் தலைநாட்டி, துடைகளில் முன்கை வைத்து, முகவாய் தாங்கி உட்கார்ந்திருக்கிறான். உடை, ஒரு சாதாரண பேண்டும் சிலாக் சட்டையும், வயது லிருந்து வரை.
இடையில், பின்னணியில் ஒரு பெரிய பேருந்து நிலையத்தின் இரைச்சலும் சத்தங்களும் அவை மெல்ல எழுந்து, உரத்து பின் மெல்ல அடங்குகின்றன. முகத்தில் சோகம். இருந்தாலும், விடுபட்டுத்தானே ஆக வேண்டும்? என்ற உணர்வுகூட, அவன் மெல்ல க் கைகளை உதறி, இயல்பு நிலைக்கு வர முயல்கிறான்.
அவன்: ரொம்பப் பெரிய விஷயம் இல்லதான். ஆனாலும் (இடைவெ ளி) நூத்து அம்பது ரூபா (இடைவெ ளி) பிக்பாக்கெட் ஆயிடுச்சு. எவனோ அடிச்சுட்டான். (நேரடியாக அவையைப் பார்த்து) இவ்வளவுதானே.
ஒரு பிக்பாக்கெட் ஆயிட்டதுக்கா என்னமோ கப்பலே கவுந்து போயிட்ட மா திரி உக்காந்து இருந்தே அப்படின்னு கேக்கறீங்களா? அது உங்க குற்றமில்லதான். அது இயற்கைதான். பேருந்து நிலையம் சர்பத் கடை சோடா கடை வீடு கீழக்கோபுர வாசல் 11th Advance Tamil - - - :