📖 Samacheer Kalvi · 11th TN - English Medium · Advanced Tamil · Page 157grammar_exercise

ஒரு தொடரை இருவகையாக விளக்குதல்

Chapter 2: அரங்கவியல் · Advanced Tamil

ஒரு தொடரை இருவகையாக விளக்குதல் குறிப்பிட்ட ஒரு தொடரை இருவகையாக விளக்குவது குறித்தும் தொல்காப்பியர், சில நூற்பாக்களில் கூறியுள்ளார். (எ.கா.) புலி கொல் யானை. இத்தொடர் இருவகையில் பொருள் மாற்றமுடையதாக அமையும். புலியைக் கொன்ற யானை எனவும் புலியால் கொல்லப்பட்ட யானை எனவும் இரு மாறுபட்ட பொருளைத் தருகின்றது.

இங்கு வினைமுதல் மாறுவதற்கேற்ப, வினை வடிவம் மாறுகிறது. இதனைத், ‘தடுமாறு தொழிற்பெயர்க்கு இரண்டும் மூன்றும் கடிநிலை இலவே பொருள்வயி னான‘ – (தொல். சொல். வேற்.

மயங்கியல் ) என்னும் நூற்பா விளக்குகிறது. ஆகவே, தொடரில் பொருள் மயக்கம் தோன்றாத வகையில் ஏற்புடைய வேற்றுமையுருபுகளைப் பயன்படுத்துதல் வேண்டும்.

Related topics

Have a question about this topic?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →