📖 Samacheer Kalvi · 11th TN - English Medium · Advanced Tamil · Page 134question

உரை

Chapter 2: அரங்கவியல் · Advanced Tamil

உரை கெட்டிஸ்பர்க்கில் நவம்பர் 19ஆம் நாள் நடைபெற்ற நினைவுச்சின்னம் திறப்பு விழாவில் கலந்து கொண்டு லிங்கன் நிகழ்த்திய உணர்ச்சிமிகு உரை.... “ எண்பத்தேழு ஆண்டுகளுக்கு முன்பு நமது முன்னோர் இந்தக் கண்டத்தில் சுதந்திரத்தை மனத்திற்கொண்டும் எல்லா மனிதர்களும் சமமா னவர்கள் என்ற எண்ணத்திற்கு அர்ப்பணித்தும் ஒரு புதிய நாட்டை உருவாக்கினர். அப்படி உருவாக்கப்பட்ட, அர்ப்பணிக்கப் பட்ட ஒருதேசம் நீண்டகாலம் நிலைபெற்றிருக்குமா என்று பரிசோதனை செய்யுமொரு பெரும் உள்நாட்டுப் போரில் நாம் தற்போது ஈடுபட்டிருக்கிறோம். அந்தப்போரின் களத்திற்கு நாம் கொண்டு வரப்பட்டிருக்கிறோம்.

இந்தத்தேசம் வாழ்வதற்காகத் தங்களுடைய இன்னுயிரைத் தந்தவர்கள் இறுதிஓய்வு கொள்வதற்காக இந்தக்களத்தின் ஒருபகுதி மண்ணை அர்ப்பணிப்பதற்காக வந்திருக்கிறோம். நாம் இதைச் செய்வது பொருத்தமானதும் முறையானதுமாகும். ஆனால், ஒரு விரிவான பொருளில் பார்த்தால் நாம் இந்த மண்ணை வெறுமனே அர்ப்பணிக்க முடியாது; புனிதப்படுத்திவிட முடியாது. போரில் வீர மரணம் அடைந்த, உயிரோடு இருக்கிற மாவீரர்கள், நாம் நமது அற்ப அதிகாரத்தை வலுப்படுத்துவதற்கோ குறைப்ப தற்கோ முன்னதாகவே தம் போராட்டத்தின்மூலம் இந்த மண்ணைப் புனிதப்படுத்தி விட்டார்கள்.

நாம் இங்கே என்ன சொல்கிறோம்? என்பதை உலகம் கவனத்தில் கொள்ளவோ நீண்ட காலம் நினைவில் வைத்திருக்கவோ செய்யாது. ஆனால், அது அவர்களின் வீரச்செயலை ஒருநாளும் மறக்கா து. அவ்வீரர்களின் முற்றுப்பெறாத பணிகளை, வாழ்ந்துகொண்டிருக்கும் நாம்தான் அர்ப்பணிப்புடன் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.

இங்கே நாம் கௌரவப்படுத்திய வீரர்கள் எந்த நோக்கங்களுக்காகத் தம் அர்ப்பணிப்பை முழுஅளவில் 11th Advance Tamil - - - :

Related topics

Have a question about this topic?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →