அறவியல் இலக்கியங்கள்
Chapter 15: அறவியல் இலக்கியங்கள் · ADVANCED TAMIL · TA medium
From your actual textbook ✓
What does your textbook say about அறவியல் இலக்கியங்கள்?
மனிதன் தனக்கென வரையறுத்துக்கொண்ட ஒழுக்கமுறைகளின் தEொகுதியே அறம். உலகிற்கு அறம் கூறும் நோக்கோடு எழுந்த இலக்கியங்களை அறவிலக்கியங்கள் என்றும் அறங்கூர் கவிதைகளை அறக்கவிதைகள் என்றும் குறிப்பிடுவர். ‘அறம்’ என்ற சொல்லை அறு+அம் எனப்பிரித்துத் தீமையை அறுப்பது, நீக்குவது என்றும் அறுதி செய்வது, கடமை களை வரையறுப்பது என்றும் பொருள் கொள்வர். பொதுவாகச் சான் றோர் விலக்கியன ஒழித்தலும்; விதித்தன செய்தலும் அறம் எனப்பெறும். அறநூல்களைச் சிறந்த இலக்கியங்களின் வரிசையில் வைத்துப் பாராட்டுவது தமிழின் மரபு. கி. பி. - ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. -ஆம் நூற்றாண்டு வரை அறம் வலியுறுத்தும் நீதிநூல்கள் தமிழில் பலவிதமான வடிவங்களிலும் வெளிப்பாட்டு முறைகளிலும் எழுதப்பெற்றுள்ளன.
📖 Class 12 Advance Tamil 2024 Edition www.tntextbooks.in · Page 22
Read from the source
Complete lesson
மனிதன் தனக்கென வரையறுத்துக்கொண்ட ஒழுக்கமுறைகளின் தEொகுதியே அறம். உலகிற்கு அறம் கூறும் நோக்கோடு எழுந்த இலக்கியங்களை அறவிலக்கியங்கள் என்றும் அறங்கூர் கவிதைகளை அறக்கவிதைகள் என்றும் குறிப்பிடுவர். ‘அறம்’ என்ற சொல்லை அறு+அம் எனப்பிரித்துத் தீமையை அறுப்பது, நீக்குவது என்றும் அறுதி செய்வது, கடமை களை வரையறுப்பது என்றும் பொருள் கொள்வர். பொதுவாகச் சான் றோர் விலக்கியன ஒழித்தலும்; விதித்தன செய்தலும் அறம் எனப்பெறும்.
அறநூல்களைச் சிறந்த இலக்கியங்களின் வரிசையில் வைத்துப் பாராட்டுவது தமிழின் மரபு. கி. பி. - ஆம் நூற்றாண்டு முதல் கி.பி.
-ஆம் நூற்றாண்டு வரை அறம் வலியுறுத்தும் நீதிநூல்கள் தமிழில் பலவிதமான வடிவங்களிலும் வெளிப்பாட்டு முறைகளிலும் எழுதப்பெற்றுள்ளன. காதலும் வீரமும் சங்க காலத்தில் போற்றப்பட்டதைப்போலவே அறமும் நீதியும் சங்கம் மருவிய காலத்தில் பெரிதும் போற்றப்பட்டன. சங்கம் மருவிய காலத்தில் இயற்றப்பட்ட பதினெட்டு நூல்கள் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் என வழங்கப்படுகின்றன. நாலடி நான்மணி நானாற்ப தைந்திணைமுப் பால்கடுகம் கோவை பழமொழி - மாமூலம் இன்னிலைய காஞ்சியோ டேலாதி என்பவே கைந்நிலைய வாம் கீழ்க்கணக்கு என்னும் பழம்பாடல் இப்பதினெட்டு நூல்களின் பெயர்களைப் பட்டியலிடுகிறது.
இந்நூல்களை அறம், அகம், புறம் என வகைப்படுத்துவர் . அறம் பதினொன்று, அகம் ஆறு, புறம் ஒன்று எனத் தEொகுக்கப்பட்டுள்ளன. இவற்றுள் அறம் பற்றிய நூல்கள் மிகுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. தமிழ் இலக்கியங்கள் முழுவதுமே அற இலக்கியங்கள் எனலாம்.
சங்க இலக்கியம், காப்பியங்கள், அறநூல்கள், சிற்றிலக்கியங்கள், புராணங்கள் என்றெல்லாம் பல பிரிவுகள் இருப்பினும், அவற்றின் பாடுபொருளின் மையம்
Related topics
Want this shaped for your exam marks?
Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.
Ask AI about this topic →